கிட்டதட்ட கடந்த 15 ஆண்டுகளாக என்னுடன் இருக்கும் கவிதைகள் இவை. யார் எழுதியதென்று தெரியவில்லை. அந்நாளில் நான் மிகவும் ரசித்துப் படித்த நாவல் நா.பார்த்தசாரதி எழுதிய ‘பொன் மனம்’. இக்கவிதைகள் அதில் இடம்பெற்றிருக்கக்கூடும், இல்லை வேறு எங்கிருந்து வந்தது என்று நினைவில்லை…
எண்சாண் உடம்பினில்
ஐம்புலக் கூடுவைத்தாய் – அந்த
ஐம்புலக் கூட்டினுள்ளே
ஆயிரம் நினைவுகள் அலைந்திட – ஓர்
ஒற்றை மனம் படைத்தாய்
ஒற்றை மனதினுள்ளே
கற்றைச் சபலங்களாய்ப் – பல
காரியச் சுமைகள் கனக்கவைத்தாய்
**
முன்னும் பின்னும் நினைவாகி – அது
[...]
அக்டோபர், 2006 க்கான தொகுப்பு
எண்சாண் உடம்பினில்…
Posted in ரசித்த கவிதைகள் on அக்டோபர் 28, 2006 | 2 மறுமொழிகள் »