கிட்டதட்ட கடந்த 15 ஆண்டுகளாக என்னுடன் இருக்கும் கவிதைகள் இவை. யார் எழுதியதென்று தெரியவில்லை. அந்நாளில் நான் மிகவும் ரசித்துப் படித்த நாவல் நா.பார்த்தசாரதி எழுதிய ‘பொன் மனம்’. இக்கவிதைகள் அதில் இடம்பெற்றிருக்கக்கூடும், இல்லை வேறு எங்கிருந்து வந்தது என்று நினைவில்லை…
எண்சாண் உடம்பினில்
ஐம்புலக் கூடுவைத்தாய் – அந்த
ஐம்புலக் கூட்டினுள்ளே
ஆயிரம் நினைவுகள் அலைந்திட – ஓர்
ஒற்றை மனம் படைத்தாய்
ஒற்றை மனதினுள்ளே
கற்றைச் சபலங்களாய்ப் – பல
காரியச் சுமைகள் கனக்கவைத்தாய்
**
முன்னும் பின்னும் நினைவாகி – அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி – நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுக்கை யதன்மேலே – முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க – மனம்
அங்கும் இங்கும் அலைபாயும்
**
பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசாதிருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே
**
இதழ மலர்ப் பொழிலில்
எண்ணங்கள் மலர்ந்திருக்க
எண்ண மலர்க் குவையில்
ஏடெழுதும் கவியிருக்கக்
கண்ணும் மனமும் பசித்திருக்கக்
கண்டவுலகில் பொய்யிருக்க
எண்ணும் எழுத்தும் சலித்திருக்க
ஏதோ நலிந்திருந்தேன்
என்னுள் மெலிந்திருந்தேன்
யப்பா!! ஏகப்பட்ட தகவல்கள் சொல்லியிருக்கீங்க. நெறைய பேர அறிமுகம் செஞ்சிருக்கீங்க. ரொம்ப நன்றி.
நைஸ் டு மீட் யூ, நதியலை.
நன்றி சரவ்