Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நவம்பர், 2006 க்கான தொகுப்பு

Title : Sons of Fortune (Novel)
Author : Jeffrey Archer
Pages : 516
இரட்டை ஆண்குழந்தைகள் (Nat Cartwright & Fletcher Davenport) பிறந்தவுடனேயே பிரிந்து வெவ்வேறு இடத்தில் வளர்ந்து கதையின் முடிவில் இணைகிறார்கள்.  பிறந்ததுமுதல் குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவமென்று இருவருடைய கதையும் ஆமைவேகத்தில் நகர்ந்து முதல் 300 பக்ககங்கள் முடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது. 
இருவரும் வெவ்வேறு துறையில் தேர்ச்சி பெற்று வேலை பார்க்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் சுவாரிஸ்யமாக நகர்கிறது. உடன்பிறப்புகள் என்று தெரியாமலே விபத்தில் சிக்கிய சகோதரருக்கு ரத்தம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

என்மீது கருணைகொள் என்மனமே

இது கலீல் கிப்ரானின் ‘Have mercy on me, my soul’ கவிதையின் மொழிபெயர்ப்பு.  இதில் soul என்று கவிஞர் எதனை குறிப்பிடுகிறார்? என்மீது கருணைகொள் என்னுயிரே என்று தன் காதலியிடம் சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன்.  பிறகு இது தனக்குள் நிகழும் போராட்டத்தை பற்றிய கவிதையெனத்தோன்றியது. soul – ‘ஆன்மா/ஆத்மா’ என்றெழுதினால் கவிதைக்கு பொருந்திவராத மாதிரி தோன்றியதால் ‘மனம்’ என்றிட்டிருக்கிறேன். முடிந்த அளவு முயற்சி செய்து மொழிமாற்றியிருக்கிறேன்.  கலீல் கிப்ரான் ரசிகர்கள் சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. 
என்மீது கருணைகொள் [...]

முழு பதிவையும் வாசிக்க »

‘பெய்யெனப் பெய்யும் மழை’ தொகுப்பில் ரசித்த கவிவரிகள்…
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
****
வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்
வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்
வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்
எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்
உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்
பழைய வார்த்தைகள் பறித்துப் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நூல் : பெய்யெனப் பெய்யும் மழை
கவிஞர் : வைரமுத்து
முதற்பதிப்பு : 1999
நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பெய்யெனப் பெய்யும் மழை’. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.
முன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்….
காலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை
வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது .
***
கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது – ஒரு
குழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது – ஒரு ஞானியின் மனம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

உடம்புயிர் எடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்புயிர் இழந்தபோது உயிரிறப்ப தில்லையே
உடம்புமெய்ம் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே! (1)
ஆதியான தொன்றுமே அநேகநேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குஞ் சுத்தமா யிருப்பரே. (2)
மலர்ந்ததாது மூலமாய் வையக மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்
புலங்களைந்து பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இனங்கலங்கி நின்றமாயம் என்னமாய மீசனே. (3)
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிருடம்பு ஒழிந்தபோதில் ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.
- நா. முத்துக்குமார் (தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)

முழு பதிவையும் வாசிக்க »

நூல் – மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் – மு. மேத்தா
முதற்பதிப்பு – 1978
1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :
“கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை”
“மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.
படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் – அதில் பயணம் செய்யும் நாம் – விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்.”
“இறுதியாக [...]

முழு பதிவையும் வாசிக்க »

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Title : Stillness Speaks
Author : Eckhart Tolle
Pages : 127
கடந்த வருடம் வாசித்த மிகச் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஒரே வாசிப்பில் முடிக்கக்கூடிய புத்தகமெனினும் அப்படி வாசித்து மூடிவைக்கக்கூடிய புத்தகம் இதுவல்ல. சற்று நிதானமாக வாசிக்க வேண்டிய புத்தகம். இதை வாசிக்கும்போது நம் சிந்தனைகளும், நம்முள் இதுவரை சரி என்று எண்ணியிருந்த சில எண்ணங்களும் மெருகேறுகின்றது, சிலது புரட்டிப்போடப்படுகிறது, சிலது சத்தமாக அழிக்கப்பட்டுவிடுகிறது, சிலது தூசு துடைக்கப்படுகிறது, நிறைய புதிய எண்ணங்களும் துளிர்க்கிறது. எங்கே [...]

முழு பதிவையும் வாசிக்க »

கவிதைகளை மொழிபெயர்ப்பதை எப்போதுமே எளிதாக செய்துமுடிக்க முடிந்ததில்லை என்னால். இரு மொழிகளையும் நன்கறிந்தவர்களால் மட்டுமே அதைச் சிறப்பாக செய்யமுடியும். இது சிரமமென்பதாலோ அல்லது சொந்தக்கவிதைகளைதான் சரியாக எழுதமுடியவில்லையே மத்தவங்க கவிதைகளில் நம் கைவரிசையை காட்டலாமே என்ற எண்ணத்தாலோ என்னவோ மொழிபெயர்ப்பதில் எனக்கு ஈடுபாடுண்டு.
சொல்லப்பட்டிருக்கும் கருத்தை உள்வாங்கிக்கொண்டு தங்கள் நடையில் மொழிபெயர்ப்பது ஒருவிதம். வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பது இன்னொரு விதம். முன்சொன்னதிற்கு கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் மிகமுக்கியம். இரண்டாவது வகையில் யார் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »