அவன் விடைபெற்றுக்கொள்ளும் நிமிடங்கள்
என் மனத்தில் துடிக்கத் தொடங்கவே
பரபரத்து ஓடினேன் பார்க்க
அப்போது அவன் சூன்யத்தில்
ஆனந்த ஓய்வுகொண்டிருந்தான்
புழு அவனைத் தின்றுக்கொண்டிருக்கும் நிலையிலும்
கண்களில் உயிரின் பிரகாசம் மின்னிற்று
ஆனந்த ஓய்வில் அவன் எழுதியிருந்த கவிதையை
- கடைசி வரிகளா அவை – பார்த்தேன்
மரக்கிளைக் குருவி ஒன்று அருவியைப் பார்ப்பது போல்.
மரணம் இறங்கும் விதத்தைப் பார்க்கிறான்
அதற்கு மேல் ஒரு மயிரிழை இல்லை
ஈரக்கசிவு இல்லை இன்னும் கொஞ்சம் எனும் இரங்கல் இல்லை
கடைசிப் புள்ளியில் தளம் கட்டும் துக்கம் இல்லை.
ஆற்றாமை என் தொண்டையை அடைக்க
இழை அறாது என் மனதில் [...]
மார்ச், 2007 க்கான தொகுப்பு
சாகா இறப்பு
Posted in சுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் on மார்ச் 26, 2007 | 1 மறுமொழி »
அன்புடன் ஆண்டுவிழா 2 – கவிதைப் போட்டி
Posted in பொது on மார்ச் 13, 2007 | 4 மறுமொழிகள் »
இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!
“இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே”
எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை… சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்… இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது…
உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் [...]
மனப் பெண் – பாரதியார்
Posted in பாரதியார், ரசித்த கவிதைகள் on மார்ச் 12, 2007 | 2 மறுமொழிகள் »
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதிய காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் [...]