Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஏப்ரல், 2007 க்கான தொகுப்பு

Title : Disgrace
Author : J.M.Coetzee
Pages : 220
Year : 1999

புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது.  பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை விவாகரத்தாகிபின் தனித்து வாழ்கிறார்.  கல்லூரியில் தன்வகுப்பில் பயிலும் மாணவியிடத்து காதல்வயப்பட்டு அவளுடன் உறவுகொள்கிறார்.  இதனை அறிந்த அவள் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் கொடுக்க, டேவிட் லூரி வேலையிலிருந்து விலகும் சூழல் உருவாகிறது.  தன்செயலுக்காக வருந்தவில்லையெனினும் தற்காத்துக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்காமல் நிர்வாகத்திடம் மன்னிப்பு [...]

முழு பதிவையும் வாசிக்க »

உன்னையொருவன் தாக்குகையில்
உணர முடியும் பகையென்று
தன்னைத் தானே தாக்குமிவன்
தன்மைக்கிங்கே யாது பொருள்?
அடிமேலடிகள் விழுந்துவிட
அம்மிக்கல்லு நகருமெனில்
முடிவேயின்றி இவன் தன்னை
முட்டிக்கொள்வது சோகரசம்
இன்னொரு கன்னம் காட்டிடுக
இயேசு சொன்னது அமைதிக்கு
தன்னுயிர் சொட்ட தாக்குமிவன்
தருகிற தகவல் வறுமைக்கு
கண்ணடி பட்டால் காதலெனும்
கவிதைகளுண்டு ரசிப்பதற்கு
தண்டனைபோல கசையடித்து
தட்டுகளேந்தும் நிலையெதற்கு?
கதிரடி பட்டால் நெல் குவியும்
கணக்கு உள்ளது வயற்காட்டில்
முதலடி பட்டால் நஷ்டம்வரும்
மூத்தோர் சொல் மனக்கூட்டில்
தன்னைப்போல பிறவுயிரை
தரிசிக்கத்தானே வேண்டுமென
தன்னைத் தாக்கி உலகியலைத்
தண்டிக்கிறானோ?  புரியவில்லை
இன்னொரு ஜென்மம் வந்தாலும்
இப்படியே நாம் அடிபடுவோம்
என்பதைச் சொல்லித் தரத்தானோ
எதிரே வருகிறான்?  தெரியவில்லை
அன்னைதந்த பால்முழுதும்
அய்யோ வழியுது உடலெல்லாம்
முன்னம் யாரோ செய்தபிழை
முற்றிவிட்டது தெருவெல்லாம்
சலங்கை கட்டிய [...]

முழு பதிவையும் வாசிக்க »