எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்? மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?
2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா?
3. பகுத்தறிவு உண்மையை அறியும் தகுதியுடையதா அல்லது பகுத்தறிவினும் மேலான வேறு எதாவது சுட்டுணர்வை மனிதன் பெற்றிருக்கிறானா?
4. மனிதன் நிச்சயத்தன்மையை அடையமுடியுமா அல்லது அவன் நித்தம் சந்தேகத்துடனேயே இருக்க விதிக்கப்பட்டவனா?
நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் தன்னம்பிக்கையின் அளவும் உங்கள் வெற்றிகளும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் epistemologyயின் தளம், மனிதனின் சுட்டுணர்வு வழிகளை ஆராயும் அறிதலின் கோட்பாடு.
(தொடரும்)
7 மறுமொழிகள்
12:21 பிற்பகல் இல் பெப்ரவரி 14, 2008
good work…but pls try to avoid spelling,grammatical mistakes
12:52 பிற்பகல் இல் பெப்ரவரி 14, 2008
நன்றி பாஷா…. பிழைகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
8:42 பிற்பகல் இல் பெப்ரவரி 15, 2008
ஒரு மனிதன் திடீரென்று அதீத சக்தியால் அறிவு பேருவதுஎன்பது இயலாத காரியம். ஒரு மனிதனின் தீவிர ஆராய்ச்சியினாலும் பகுப்பாயிவினாலும் மட்டுமே ஒருவன் ஞ்சனத்தைஅடைய முடியும். அதீத சக்தியை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் அனைத்துமே அதீத சக்தியால் நிகழ்கிறது என்பதை மறுக்கிறேன். ஒரு மனிதன் எதையுமே படிக்காமல் அல்லது ஆராயாமல் ஞானத்தை பெற்று விட முடியும் என்பது ஒரு அடிப்படை அற்ற கருத்து. இது பொதுவாக இறையியலில் உள்ளவர்கள் சொல்லுவது. சொல்லுபவர்கள் மிக சிறப்பாக புத்தகங்களை படிப்பவர்கள் தான். அனல் அவர்கள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
8:45 பிற்பகல் இல் பெப்ரவரி 15, 2008
நீங்கள் யார் என்று தெரிந்தால் மிகவும் மகிழ்வேன்.
அன்புடன்
ததேயு
8:47 பிற்பகல் இல் பெப்ரவரி 15, 2008
உங்களுக்கு எப்படி epistemology யை பற்றி அறிவு கிடைத்தது.
10:55 பிற்பகல் இல் பெப்ரவரி 15, 2008
இது பொதுவாகவே இறையியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். உங்களுக்கு எப்படி தெரிந்தது.
9:55 மு.பகல் இல் பெப்ரவரி 16, 2008
இவை என் கருத்துக்கள் அல்ல. அயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது.