தெய்வீகமானது
கற்பைப்போன்றது
காதலும் காமமுமற்றது
புனிதமானது
நட்பினும் மேலானது
பெயரற்றது
இதாலானது
அதாலானது
என்பன போன்ற
பிதற்றல்களையெல்லாம்
தூக்கி எறிந்துவிட்டு
வெறுமனே என்னிடம் வா
உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு
பின்
என் முகத்தில்
உமிழ்ந்து
விட்டுச்செல்
ஜூன், 2008 க்கான தொகுப்பு
உமிழ்ந்து விட்டுச்செல்
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on ஜூன் 4, 2008 | 17 மறுமொழிகள் »