Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூலை, 2008 க்கான தொகுப்பு

பெயர் அறியா பூச்சிகளை
அடித்து நசுக்கியபின்
மனங்குத்துதலோடு 
நகரத்தொடங்கிய காலையில்
பூரணமாய் வெளிச்சங்கள்
விழுங்கப்பட்டு
குதலை விழுதுகள் படர்ந்து
சுட்டிக்காட்டும்வரை
விளங்கவேயில்லை
முடிந்த வினைகளின்
குரூரங்கள் நல்வினையென்றும்
தண்மைகள் தீவினையென்றும்

முழு பதிவையும் வாசிக்க »

சிறு செடிகள்

விழிபுலனின் சாரங்களை அறிந்திடாதவளுக்கு
சில பறவைகள்
பலவிதமான மரங்களை
எங்ஙனம் பார்க்க வேண்டுமென்றும்
பூவில் நுழைந்து அதனூடே
மரத்தின் உட்புறங்களில்
எங்ஙனம் ஊடுருவ வேண்டுமென்றும்
அறிமுகப்படுத்திக்கொடுத்தப்பின்னும்
இருளை பழகிய கண்களின்
பார்வையில் விழுந்த மரங்களெல்லாம்
புரியாத பிம்பங்களாக இருந்ததெனினும்
தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க
வனங்களில் உலாவிக்கொண்டிருந்த
பறவைகளற்ற ஒரு சூரிய பொழுதில்
மரங்களின் வெளித்தோற்றம் மட்டுமல்ல
புதைந்து கிடக்கும் வேர்களுக்குள்ளும்
நுழைந்துப்பார்க்க முடியுமெனக் கண்டறிந்தவள்
இப்போது தானும் உருவாக்க துவங்கிவிட்டாள்
சிறு செடிகளை பலரின் பார்வைக்கு

முழு பதிவையும் வாசிக்க »

மறைவின் நிழலில்
அவள் நிர்வாணத்தை
மறைக்கத்துவங்கிய காலமெதுவென
மறந்தே போனாள்
ஆடைக்கும் மேல் ஆடையாக
அணிந்துகொண்டே இருக்கையில்
ஆதிவடிவமும் அங்கங்களும்
மறைந்து
கனக்கத்துவங்குகிறாள்
பூர்வீகத்திற்குத் திரும்ப இயலா
பாறையாய் நின்றுவிட்ட அவளை
வசீகரமானதாய் ரசனைக்குரியதாய்
இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்
பெருந்தண்குன்றாகிவிட
விரைந்துகொண்டிருப்பதை
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
வெறுமனே
************************************** 
துக்கங்களை எழுதுதல்
புஞ்சிரிப்புடன்
வெண்போர்வைக்குள் 
நீட்டிப்படுத்திருக்கும் உடல்
எவ்வுடை உடுத்தியிருக்கும்
என்ற சிந்தனையில்
அம்முகம் பார்க்கையில்
மூடிக்கிடக்கும் கண்கள்
எக்கணத்திலும் திறக்குமென
நம்பிக்கையூட்டுவதான பாவனையில்
சாந்தமாய் இருக்கிறது
பதினேழு வருடங்களாய்
வயது முதிராமல்
தேவைக்கேற்பத் திறந்து மூடி
சிதையாமல் குறைவில்லாமல்
தொடர்கிறது என்னோடு
துக்கங்களை எழுதுவது
எளிதென்பதைச் சொல்லிக்கொண்டே
(அப்பாவிற்கு)
*******************************************
வித்தியாசம் அறிதல்
வீசிய காற்றில்
ஒரு பூவும் ஒன்றிரண்டு இலைகளும்
வீட்டினுள் பிரவேசித்தன
வித்தியாசங்களை
கண்டுபிடிக்கும் முனைப்புடன்
புத்தகத்தில் மூழ்கியிருந்த மகள்
உள்ளறையில் இருக்கும் மனிதன்
மற்ற படத்தில் இல்லாததைக் கவனித்து
ஒரு வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக
மகிழ்ச்சியில் கூவுகிறாள்
மகளே இது வெறும் ஒரு வித்தியாசமன்று
எனக்கூற விழையும்முன்னே
அடுத்த பக்கத்துக்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »