Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2008 க்கான தொகுப்பு

சமனில்லாக் கால்கள்

வசீகர பூமியின்
நிழற்சாலையில்
முன்னகர்ந்துக்கொண்டிருக்கின்றன
கால்கள்
நெரிசலில் முட்டியும்
பிணைந்தும்
விரட்டியும்
தாவியும்
விந்தியும்
வேகம் கூட்டியும்
தளர்ந்தும்
தனித்து விலகிய
ரகசியகண்களிரண்டு
சமனில்லாத என் கால்கள்
நின்ற இடத்தில் நிற்பதையும்
சமயங்களில்
எடுத்து வைக்கும் அடிகள் கூட
பின்னகர்ந்துக்கொண்டிருப்பதையும்
வினோதமாகப்பார்த்துச்செல்கிறது
நன்றி : உயிரோசை

முழு பதிவையும் வாசிக்க »

சொற்குவியல்

ஒரு சொல்லிலிருந்து
சொற்களோடு புறப்படத் தெரிந்தவளுக்கு
அவற்றை
எங்குகொண்டு செல்ல வேண்டுமென்றும்
எங்கிருந்து வந்ததென்றும்
தொடங்கிய நிலைக்கு
எங்ஙனம் திரும்ப வேண்டுமென்றும்
புதிய உயரத்திற்கு
எங்ஙனம் தூக்கி நிறுத்தவேண்டுமென்றும்
தெரியாதெனினும்
மீண்டும் மீண்டும்
புறப்பட்டுக்கொண்டிருக்கிறாள்
எதிர்படும்
ஒவ்வொரு புதிய சொல்லிலிருந்தும்
சொற்குவியலோடு
நன்றி : உயிரோசை

முழு பதிவையும் வாசிக்க »