விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது [...]
‘அப்துல் ரகுமான்’ பகுப்புக்கான தொகுப்பு
தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள் on டிசம்பர் 7, 2006 | 12 மறுமொழிகள் »
உதிரும் சிறகுகள் – அப்துல் ரகுமான்
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள் on டிசம்பர் 4, 2006 | Leave a Comment »
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
அப்துல் ரகுமான்
தொகுப்பு – சுட்டுவிரல்
பித்தன்
Posted in அப்துல் ரகுமான், வாசித்த நூல்கள் on நவம்பர் 9, 2006 | Leave a Comment »
செல்லப்பெயர்களில் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்ட பெயர் ‘லூசு’. அநேகமாக நாம் அனைவரும் ஒருமுறையேனும் இப்பெயரால் அழைக்கப்பட்டிருப்போம். இதுவரை யாராவது இப்படி அழைக்கப்படாவிட்டால் இனியேனும் தங்களின் நெருங்கியவர்கள் தங்களை இப்படி அழைக்க என் வாழ்த்துக்கள் . லூசுப்பெண்ணே பாடலை முதல் முறை கேட்கும் பொழுது இது என்ன லூசுத்தனமான பாடல் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து கேட்ட பிறகு அதுவும் பிடித்து போயிற்று. தற்பொழுது டாப் 10 பாடல்களில் முதலிடம் வகிக்கிறது [...]
கொடுக்கல்
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள் on நவம்பர் 8, 2006 | Leave a Comment »
கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் [...]
சொந்தச் சிறைகள்
Posted in அப்துல் ரகுமான் on நவம்பர் 7, 2006 | Leave a Comment »
எதிர்ப்பதங்கள் அர்த்தச் சலங்கை கட்டி ஆடும் சதிர்ப்பதங்கள். ஒன்றை ஒன்று சொந்தம் கொண்டாடும் எதிரொலிகள். ஒன்றை ஒன்று வெளிச்சப் படுத்தும் பிம்பங்கள். வாழ்க்கையின் ஏறி இறங்கும் மூச்சு ஓட்டங்கள்.
- அப்துல் ரகுமான் (சொந்தச் சிறைகள்)
அந்தப்புரங்களில்….
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள் on நவம்பர் 6, 2006 | Leave a Comment »
நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் – எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்
எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி
குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்
நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்
ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்
- அப்துல் ரகுமான் (பால்வீதி)
கதவு
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள் on நவம்பர் 6, 2006 | 1 மறுமொழி »
அப்துல் ரகுமானின் ‘பித்தன்’ தொகுப்பிலிருந்து…
கதவு
—–
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு [...]
பால்வீதி – அப்துல் ரகுமான்
Posted in அப்துல் ரகுமான், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது பால் வீதி on நவம்பர் 6, 2006 | Leave a Comment »
அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’ தொகுப்பிலிருந்து…
தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்
*******************
சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம்
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்டு
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவி
அப்துல் ரகுமான் – கவிதைகள் / கட்டுரைகள்
Posted in அப்துல் ரகுமான் on நவம்பர் 4, 2006 | Leave a Comment »
கவிதை தொகுப்புகள் :
1. பித்தன்
2. நேயர் விருப்பம்
3. பால் வீதி
4. சுட்டு விரல்
5. ஆலாபனை (சாகித்ய அகாடெமி விருது பெற்றது)
6. மின்மினிகளால் ஒரு கடிதம்
7. விதை போல் விழுந்தவன் (அண்ணா கவியரங்கக் கவிதைகள்)
8. முத்தமிழின் முகவரி (கலைஞர் கவியரங்கக் கவிதைகள்)
9. சொந்தச் சிறைகள் (வசன கவிதை)
10. மரணம் முற்றுப் புள்ளி அல்ல
கட்டுரை தொகுப்புகள் :
1. மகரந்தச் சிறகு
2. அவளுக்கு [...]