பலவிதமான தமிழ் வலைப்பதிவுகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை மட்டுமே குறியாகக் கொண்டு ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எட்டுதிக்கும் என்கிற பெயரில் இயங்கும் இத்தளத்தில் மொழிபெயர்ப்பு முன்னொடியான ஏ.கே. ராமானுஜன் அறிமுகத்துடன் இரண்டு சங்கப்பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள நண்பர்கள் இதில் பங்களிக்குமாறு கீழ்கண்ட அறிமுகக் குறிப்பு தரப்பட்டுள்ளது.
அறிமுகம்
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், [...]