காற்று செல்லும்
திசையில் பறக்கிறது
ஒரு இலை
ஒரு இறகு
மரமோ பறவையோ
தன் இழப்பை
பொருட்படுத்துவதில்லை
**********************
நேற்று ஏற்பட்ட
மனத்தாங்கலை
செடிக்கு நீர்பாய்ச்சிய
இடத்தில் விட்டேன்
அக்கேடு பின் உரமாகிவிட்டது
மனதிலேற்பட்ட வெற்றிடத்தில்
அச்செடி தன் புதிய இலையை
துளிர்த்தது.
- கரிகாலன் (தொகுப்பு – ஆறாவது நிலம்)
‘கரிகாலன்’ பகுப்புக்கான தொகுப்பு
ஆறாவது நிலம் – கரிகாலன்
Posted in கரிகாலன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது ஆறாவது நிலம் on டிசம்பர் 5, 2006 | 1 மறுமொழி »