Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 12, 2009 | 4 மறுமொழிகள் »
அடர்கருப்பில் ஊரடங்கி
வான் பூத்து ஒளிரும் நேரம்
துடைத்து மெழுகி
திடமாய் வைத்திருக்கும் பரப்பில்
சாம்பலாய் சுழன்று பரவும்
சக்கர நினைவுகளை
நிறம் மாற்றுமென்
பிரயத்தனங்கள் அறிந்து
அவை
நான் நெருங்கவியலா
மலையடிவார
புற்களினடியில்
தஞ்சம் புகுவதை
ஊறும் எறும்புகள்
பார்த்துச் சிரிக்கின்றன
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 9, 2009 | 7 மறுமொழிகள் »
இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
அவை நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 8, 2009 | 8 மறுமொழிகள் »
என்றுமே நிறைந்திடாத
உள்ளடுக்குகளின் இருப்பை
எவ்விடுக்குகளிலும்
கசிய விடாது
பத்திரப்படுத்துமென்
விழிப்புணர்வை
அறிந்தே அவளும்
ஊற்றிச்சென்றாள்
அவை
பாறைகளில்
திட்டுத்திட்டாக தேங்கி
காற்றுக்கு தளும்பும்
மழைநீராகின்றது
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 7, 2009 | 8 மறுமொழிகள் »
செடிகளும் மரங்களும்
மண்ணரிப்பைத் தடுக்குமென்று
நீரூற்றி
உரமிட்டு
பதமாக வளர்த்த
மரங்களின் கிளைகளை
தன் இருப்பை உணர்த்தியபடி
அசைத்துக்கொண்டிருக்கும் காற்று
கண்ணாடி சன்னல் வழி
பார்த்துக் கொண்டிருக்குமெனக்கு
ரகசியமாய் கூறிற்று
மண்ணிற்கு
எவ்வேரிடத்தும்
அகப்பட்டுவிடாமல்
தான் அலைக்கழிக்கும்
திசை நகர்ந்து கொண்டிருக்க
விருப்பமென்று
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஏப்ரல் 1, 2009 | 4 மறுமொழிகள் »
சிலிர்ப்போடும் சலிப்போடும்
நாளும் எதிர்ப்படும்
மனிதர்களில்
பலருக்கும்
பலதாக இருக்க
அது
மலைக்கோயிலின்
செங்குத்தான படிகளை
மூச்சுத்திணற
சிரமப்பட்டு ஏறி
நடுநிசியில் உச்சி அடைய
அவ்விடம் சூழ்ந்திருக்கும்
மௌனமாகிறது
எனக்கு
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on மார்ச் 30, 2009 | 6 மறுமொழிகள் »
கல்தூண்களை துளைத்து
வெளிவரும் விழிகளுக்கு
உழுது பயிரிட்டும்
விளைநிலமாகாது
பாளம் பாளமாக வெடித்த
வெற்றிடங்களே
காணக்கிடைக்கின்றதெனினும்
அந்தியில்
பறவைகள் எப்போதும்
தம் கூடுகள் நோக்கியே
பறக்கின்றன
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on அக்டோபர் 8, 2008 | 3 மறுமொழிகள் »
வசீகர பூமியின்
நிழற்சாலையில்
முன்னகர்ந்துக்கொண்டிருக்கின்றன
கால்கள்
நெரிசலில் முட்டியும்
பிணைந்தும்
விரட்டியும்
தாவியும்
விந்தியும்
வேகம் கூட்டியும்
தளர்ந்தும்
தனித்து விலகிய
ரகசியகண்களிரண்டு
சமனில்லாத என் கால்கள்
நின்ற இடத்தில் நிற்பதையும்
சமயங்களில்
எடுத்து வைக்கும் அடிகள் கூட
பின்னகர்ந்துக்கொண்டிருப்பதையும்
வினோதமாகப்பார்த்துச்செல்கிறது
நன்றி : உயிரோசை
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது Add new tag, கவிதை on அக்டோபர் 8, 2008 | 2 மறுமொழிகள் »
ஒரு சொல்லிலிருந்து
சொற்களோடு புறப்படத் தெரிந்தவளுக்கு
அவற்றை
எங்குகொண்டு செல்ல வேண்டுமென்றும்
எங்கிருந்து வந்ததென்றும்
தொடங்கிய நிலைக்கு
எங்ஙனம் திரும்ப வேண்டுமென்றும்
புதிய உயரத்திற்கு
எங்ஙனம் தூக்கி நிறுத்தவேண்டுமென்றும்
தெரியாதெனினும்
மீண்டும் மீண்டும்
புறப்பட்டுக்கொண்டிருக்கிறாள்
எதிர்படும்
ஒவ்வொரு புதிய சொல்லிலிருந்தும்
சொற்குவியலோடு
நன்றி : உயிரோசை
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on ஆகஸ்ட் 25, 2008 | 5 மறுமொழிகள் »
அன்பின் மிகுதியால்
ஆர்த்தெழுந்த வன்மக் கசடுகள்
உருவாக்கிக்கொண்டிருக்கும்
தீயில் எரிந்துவிடாமலிருக்க
லாவகமாகத் தள்ளியே இருக்கிறாய்
தானே ஓய்ந்து ஒடுங்கி
அணையும் நேரம் பார்த்து
நீர் கொண்டு வரும் பாவனையில்
நெருங்கி
ஓங்கி எரியவைத்துச்செல்கிறாய்
இப்பொழுது அணைக்கவியலாதெனத்
தெரிந்தும்
அணையும் பாவனையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
வந்து மழை பொழிவதாக
பொழிந்துவிட்டுச் செல்!
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on ஆகஸ்ட் 11, 2008 | 5 மறுமொழிகள் »
சிதறிய மழைத்துளிகள்
வான் நோக்கி எழுந்து கொண்டிருந்த
கணத்தில்
விரிந்தெரிய
விளக்கில் ஊற்றிய எண்ணெய்
திரியை மூழ்கடிக்க
அணைக்கப்பட்ட சுடர்
பறந்து வந்து
என்னிடம் ஒளித்துக்கொண்டிருந்தது
திணிக்கப்படும் முடிவுகளை
சுமப்பது எளிதென்று
முழு பதிவையும் வாசிக்க »