Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘சித்தர் பாடல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
- சித்தர் சிவவாக்கியர்
சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது.  உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

உடம்புயிர் எடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்புயிர் இழந்தபோது உயிரிறப்ப தில்லையே
உடம்புமெய்ம் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே! (1)
ஆதியான தொன்றுமே அநேகநேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குஞ் சுத்தமா யிருப்பரே. (2)
மலர்ந்ததாது மூலமாய் வையக மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்
புலங்களைந்து பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இனங்கலங்கி நின்றமாயம் என்னமாய மீசனே. (3)
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிருடம்பு ஒழிந்தபோதில் ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

அவ்வெனும் எழுத்தினால் அகண்டுயேழு மானதும்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றதும்
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (1)
அவ்வுதித்த மந்திரம் அகரமாய் உகரமாய்
எவ்வெழுத் தறிந்தவர்க் கெழுபிறப்ப திங்கில்லை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத் திருத்தினால்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (2)
மூன்றுமண்ட லத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. (3)
மூன்றும்மூன்றும் மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்மஞ் செழுத்துமாய் முழுங்குமவ் வெழுத்துளே
ஈன்றதாயு மப்பரும் எடுத்துரைத்த நாதமய்
தோன்றுமண்ட லத்திலே [...]

முழு பதிவையும் வாசிக்க »

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலென் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே. (1)
அறத்திறங் களுக்கும்நீ அண்டமெண் திசைக்கும்நீ
திறத்திறங் களுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறைவதேது மன்றுளே. (2)
விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களித்த உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
என்கலந்த ஈசனோடு இசைந்திருப்ப துண்மையே. (3)
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்த தெங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு தெங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே! [...]

முழு பதிவையும் வாசிக்க »