பல்வேறான முடிச்சுக்களால் பிணைக்கப்படும் உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாய்ச்சொல்லும் வெவ்வேறு மூன்று கதைகளை உள்ளடக்கமாய்க் கொண்ட இந்த டச்சுத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்பை, நெகிழ்வைப் பேசும் படைப்புகள் அனைவருக்குமே மிக நெருக்கமானவையாகத்தான் இருக்கமுடியும். மூன்று கதைகளுமே ஒரு தந்தை தன் சிறு மகனை சந்திக்கும்போது கூறுவதாக அமைந்திருக்கிறது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத கதைகள் எனினும் அவை மூன்றுமே மனம் நெகிழச்செய்யும் உணர்வுகளைக்கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.
1.
தினமும் பள்ளிவாசலில் ஓதுவதற்கு ஒரு முதியவரை முதுகில் சுமந்துச் செல்கிறான் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் [...]
‘திரைப்படம்’ பகுப்புக்கான தொகுப்பு
Magonia
Posted in திரைப்படம் on அக்டோபர் 14, 2009 | 9 மறுமொழிகள் »
The Match Factory Girl (Finnish, 1990)
Posted in திரைப்படம், குறிச்சொல் இடப்பட்டது Aki Kaurismaki on ஆகஸ்ட் 31, 2009 | 6 மறுமொழிகள் »
எவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும்!. அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள், கிளப், பியர் மீண்டும் மறுநாள் காலை தொழிற்சாலை. தொடரோட்டமாக இப்படியே நகர்ந்துக்கொண்டிருக்கும் வாழ்வில் அவள் புன்னகைக்க கூட காகித மாந்தர்கள் மட்டுமே [...]
Offside
Posted in Persian (Iran) Films, திரைப்படம், குறிச்சொல் இடப்பட்டது Jafar Panahi on ஆகஸ்ட் 27, 2009 | 7 மறுமொழிகள் »
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.
2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் [...]
The Band’s Visit
Posted in Arabic (Israeli) Film, திரைப்படம், குறிச்சொல் இடப்பட்டது Eran Kolirin on ஆகஸ்ட் 25, 2009 | 2 மறுமொழிகள் »
இஸ்ரேலிய இயக்குனரான Eran Kolirin எழுதி இயக்கிய முதல் திரைப்படமான The Band’s Visit ஐ சென்ற வாரம் காண நேரிட்டது. 2007ல் வெளிவந்த படமிது. அரபு மொழிப்படமென்றாலும் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. எளிமையான திரைக்கதையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இதன் இயக்குனர்.
எந்த ஊரானாலும், என்ன மொழி பேசினாலும், எல்லா மனித மனங்களும் அதன் அடி வேர்களில் துயரையே சுமந்துக்கொண்டு அலைகின்றனவோ எனத் தோன்றுகிறது. நமக்கு தெரிந்தவர்களிடம் நமக்கான ஒரு போலி முகத்தை உருவாக்கிக்கொண்டு [...]
வட்டம்
Posted in Persian (Iran) Films, திரைப்படம், குறிச்சொல் இடப்பட்டது Jafar Panahi on ஆகஸ்ட் 19, 2009 | 2 மறுமொழிகள் »
The Circle
இரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும். தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? இதற்கு முன் எப்படி இருந்தனர்? இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும்? என்கிற பல [...]
உலக திரைப்படங்கள்
Posted in திரைப்படம், குறிச்சொல் இடப்பட்டது World Movies on ஆகஸ்ட் 17, 2009 | 12 மறுமொழிகள் »
உலகப்படங்களை பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கென மிகச்சிறந்த படங்களை ஒளிபரப்பி வருகிறது UTV World Movies. அனைத்து மொழி படங்களையும் எங்கும் தேடி அலையாமல் சுலபமாக வீட்டிலேயே பார்க்கக் கிடைப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பர்மா பஜாரில் தேடித்தேடி எடுத்து பேரம் பேசி 10-15 டிவிடிகள் மொத்தமாக வாங்கி வந்தால் அவற்றில் நிச்சயம் இரண்டு மூன்று படங்களின் டிவிடி வேலை செய்யாமல் கடைகாரரை திட்டிக்கொண்டிருப்போம். கடைகளில் வாடகைக்கு எடுக்கலாமென்றால் அவசர அவசரமாக பார்த்து படத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாக இருக்கும். சில [...]