எகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.
“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் [...]
‘வாசித்த நூல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு
The Map of Love – Adhaf Soueif
Posted in Adhaf Soueif, Booker Novels, வாசித்த நூல்கள் on அக்டோபர் 28, 2009 | 2 மறுமொழிகள் »
வலியோடு முறியும் மின்னல் – பிரான்சிஸ் கிருபா
Posted in பிரான்சிஸ் கிருபா, ரசித்த கவிதைகள், வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது kavithai on செப்டம்பர் 3, 2009 | 4 மறுமொழிகள் »
நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.
எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல [...]
The Waves – Virginia Woolf
Posted in Virginia Woolf, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது நனவோடை எழுத்து, வெர்ஜீனியா உல்ஃப், The Stream of Consciousness on ஆகஸ்ட் 5, 2009 | Leave a Comment »
உரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது. முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது. ’நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது. அவர்களுடைய பள்ளிப்பருவத்தி்லிருந்து துவங்கி முதுமை வரை கதை நகர்கிறது சிந்தனையிலேயே. கால மாற்றங்கள் பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் எண்ணங்களின்வாயிலாகவே அறியத்தருகிறார் ஆசிரியர்.
பள்ளி பருவம் முடிந்து இருமுறை (இருபதுகளில் ஒரு முறையும் மத்திய வயதில் ஒரு முறையும்) அனைவரும் சேர்ந்து [...]
Amsterdam – Ian McEwan
Posted in Booker Novels, Ian Mc Ewan, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது Booker, Ian McEwan, novel on ஜூலை 25, 2009 | 1 மறுமொழி »
இங்கு சந்தித்து தழுவிக்கொண்ட இரு நண்பர்கள் சென்று விட்டனர் அவரவரின் சொந்த தவறுக்காகவே - W.H.Auden.
இவ்வாசகத்தை முதல் பக்கத்தில் கொண்டு தொடங்கும் கதை இவ்வரிகளையே கதையாகவும் கொண்டுள்ளது. தங்கள் காதலியும் தோழியுமான மோலியின் இறுதிச்சடங்கில் பங்குபெறும் இருநண்பர்கள் அவளின் இறப்பிற்காகவும், சிறிது சிறிதாக அவளின் மூளை செயலிழந்து தான் யார் என்பதையே அறியாமல் இறந்த விதத்திற்காகவும் வருந்துகின்றனர்.
அதற்கு பிறகு தங்களின் உடல் நிலை குறித்து அவர்களுக்கு பயம் எழுகின்றது. தன் காதலி இறந்த நிலையை என்றுமே தானும் சந்திக்கக்கூடாது என்று யோசித்த நண்பர் மற்றொருவரை அழைத்து அப்படி [...]
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – இந்திரா பார்த்தசாரதி
Posted in இந்திரா பார்த்தசாரதி, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது நாவல், indira parthasarathy on ஜூலை 23, 2009 | Leave a Comment »
எது சரி?எது தவறு? யார் நல்லவர்? யார் கெட்டவர்? எது நிஜம்? எது பொய்? இவற்றை வரையறுப்பது எது? இதற்கான அளவுகோல் என்ன? நீ என்பது இருக்கும் போதுமட்டுமே நான் என்ற ஒன்று இருக்கமுடியும் என்ற சிந்தனையில் இவற்றையும் கொண்டு சென்றால், நிஜம் இருந்தால் மட்டுமே பொய்யும் இருக்க முடியும் என்ற நிலையில் எதுவுமே நிஜமும் இல்லை பொய்யும் இல்லை என்ற சமரசத்தோடு பயணிப்பதே உகந்ததாயும் வசதியாகவும் இருக்கிறது. விலங்குகளையெல்லாம் உடைத்துவிட்டு, உயிர்ப்போடு பறக்கத்துடிக்கும் உயிர்களுக்கெல்லாம் எத்தனை [...]
வெந்து தணிந்த காடுகள் – இந்திரா பார்த்தசாரதி
Posted in இந்திரா பார்த்தசாரதி, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது நாவல், indira parthasarathy on ஜூலை 22, 2009 | 5 மறுமொழிகள் »
“…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும். அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”
நகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது. ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது. சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத [...]
The Bridges of Madison County
Posted in வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது Robert James Waller on பெப்ரவரி 11, 2008 | 2 மறுமொழிகள் »
Book : The Bridges of Madison County
Author : Robert James Waller
Pages : 171
First Edition : 1992
காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து, இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது அனுபவிக்கும் அல்லவா? ஆனால் அதை தொடர்ந்து அனுபவிக்க [...]
We the Living
Posted in Ayn Rand, அயன் ராண்ட், வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand, novel, objectivism, review on டிசம்பர் 10, 2007 | Leave a Comment »
Book : We the Living
Author : Ayn Rand
Pages : 446
First Edition : 1936The Fountain Head உயரத்தில் இப்புத்தகம் இல்லையெனினும் இதையும் அயன் ராண்டின் மிகச்சிறந்த படைப்பென்றே சொல்லலாம்.
ரஷ்ய புரட்சிக்கு பின் நிகழும் சம்பவங்களின் பின்னனியில்…அருமையான கதை, எதிர்ப்பார்த்திடாத முடிவு, கூர்மையான வாக்கிய அமைப்புகள், மனதை உலுக்கும் நிகழ்வுகள், அதை விவரித்த விதங்களென பல அற்புத அம்சங்களை கொண்ட புத்தகம், இதை கதையென்றே பார்க்க முடியவில்லை, ஒரு நிஜ சம்பவமாகவே உணரத்தோன்றுகிறது. கிரா, [...]
Alchemist – Paulo Coelho
Posted in Paulo Coelho, வாசித்த நூல்கள் on அக்டோபர் 22, 2007 | 8 மறுமொழிகள் »
Book : The Alchemist
Author : Paulo Coelho
Pages : 177
First Edition : 1988
எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது. அது பலசமையங்களில் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும், வாட்டி வதைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டும், நம் இயலாமைகளை கண்டு சிரித்தும், சகித்தும், பலவகை குழப்பங்களை அலசியெடுத்து தீர்வு கொடுத்தும், பின் அத்தீர்வை தொடரவிடாமல் குழப்பியும், நம் இருப்பிற்கு முரண்பட்ட பலவகை ஆசைகளை வளர்த்தும், அதில் சுகிக்கத்தூண்டியும் பின் அதை நிறுத்த கோஷமிட்டும்….. இப்படி அடங்காமல் தொல்லை செய்யும் [...]
Disgrace
Posted in Booker Novels, J.M.Coetzee, வாசித்த நூல்கள் on ஏப்ரல் 19, 2007 | 1 மறுமொழி »
Title : Disgrace
Author : J.M.Coetzee
Pages : 220
Year : 1999
புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது. பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை விவாகரத்தாகிபின் தனித்து வாழ்கிறார். கல்லூரியில் தன்வகுப்பில் பயிலும் மாணவியிடத்து காதல்வயப்பட்டு அவளுடன் உறவுகொள்கிறார். இதனை அறிந்த அவள் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் கொடுக்க, டேவிட் லூரி வேலையிலிருந்து விலகும் சூழல் உருவாகிறது. தன்செயலுக்காக வருந்தவில்லையெனினும் தற்காத்துக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்காமல் நிர்வாகத்திடம் மன்னிப்பு [...]