உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.
பெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது [...]
‘பாரதியார்’ பகுப்புக்கான தொகுப்பு
பெண் எழுத்தாளர்களின் புதிய முயற்சி
Posted in அறிமுகம், பெண் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பு on செப்டம்பர் 23, 2009 | 10 மறுமொழிகள் »
மனப் பெண் – பாரதியார்
Posted in பாரதியார், ரசித்த கவிதைகள் on மார்ச் 12, 2007 | 2 மறுமொழிகள் »
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதிய காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் [...]