பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
- சித்தர் சிவவாக்கியர்
சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் [...]
‘மனுஷ்ய புத்திரன்’ பகுப்புக்கான தொகுப்பு
கூட்டாஞ்சோறு
Posted in கல்யாண்ஜி, சித்தர் பாடல்கள், மனுஷ்ய புத்திரன், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள், விக்ரமாதித்யன் on மே 5, 2008 | 6 மறுமொழிகள் »
திரும்பாத முத்தம் – மனுஷ்ய புத்திரன்
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது கடவுளுடன் பிரார்த்தித்தல், manushya puththiran on ஆகஸ்ட் 20, 2007 | 1 மறுமொழி »
திரும்பாத முத்தம்
————————————–
இடப் படாத முத்தமொன்று
இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
வந்தமர்ந்தபோது
பனிக் காலத்தின் ஆயிரம்
உறைந்த கண்கள்
அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்
தன் கூச்சத்தின்
இறகுகளைப் படபடவென
அடித்துக்கொண்டது
திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்கு
தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்
இடப்படாத அந்த [...]
இடைவெளி
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது en padukkai araiyil, manushya puththiran on நவம்பர் 19, 2006 | 1 மறுமொழி »
ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங்கன்னுக்கும்
இன்னொரு தென்னங்கன்னுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்குத்
துல்லியமாய் கணக்குண்டு
என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று
- மனுஷ்ய புத்திரன் (என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)
ஒரு கூழாங்கல்
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது நீராலனது on நவம்பர் 11, 2006 | 1 மறுமொழி »
ஒரு கூழாங்கல்
—————–
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக் கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது
மண்
கல்லின் சுவையை
தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை
- மனுஷ்ய புத்திரன் (நீராலானது)
*******************
மனித நிலையில் எதிர்ப்பார்பே இல்லாமல் இருப்பது எளிதல்லன்னு தோனுது. எதோ ஒரு எதிர்ப்பார்ப்பு நிச்சயம் சராசரி மனுஷனுக்கு இருக்கும். அதுதானே மனித இயல்பு. ஆனா இந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் நாம் நம்முடைய நிலையில் மாறாம இருக்கோமான்றதுதான் கேள்வி. என்னுடைய எந்த எதிர்ப்பார்ப்பையும் நீ நிறைவேற்றாவிட்டாலும் அந்த வலியை அனுபவித்துக்கொண்டே ஒரு துளியும் உன்மேல் [...]
காற்றிற்கு – மனுஷ்ய புத்திரன்
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது மணலின் கதை on நவம்பர் 9, 2006 | Leave a Comment »
காற்றிற்கு
——————–
காற்றிற்கு
வாடைக் காற்று
புயல் காற்று
மழைக் காற்று
அனல் காற்று
கடல் காற்று
என்றெல்லாம் பெயர்கள்
எந்தப் பெயரும் இல்லாமல்
எதையும் கடந்து செல்ல முடியாமல்
கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன
நமது உலகில்
அவை உயிரூட்டப் போராடுகின்றன
கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப்பட்டிருக்கும்
வண்டுகளுக்கு
- மனுஷ்ய புத்திரன் (மணலின் கதை)
அடடா அந்தக் காற்றும் வண்டும் அதிஷ்டசாலிகள் ஒன்றுக்கொன்று ஆதரவா வாய்ச்சிருக்கே. ஆனா காற்றே இல்லாமல் அடைப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் வண்டுகள் எத்தனை, உயிரூட்ட சக்தியிருந்தும் ஒன்றுமே செய்யமுடியாமல் வெறுமையோடு தன்னதனியா அடைப்பட்டிருக்கும் காற்றுகள் எத்தனை, ஓருயிரே காற்றாகவும் வண்டாகவும் தனக்குத்தானே உயிரூட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கும் உன்னதங்கள் எத்தனை….
- நதியலை
மணலின் கதை
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது மணலின் கதை, manushya puththiran on நவம்பர் 5, 2006 | Leave a Comment »
மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ தொகுப்பிலிருந்து…
இன்றென்னைக்கொல்வதெல்லாம்
——————————
உதறி விடுவித்துக்கொண்ட
கைகளை நான் முத்தமிடக் குனிகையில்
தொண்டையை அடைத்ததில்லை
அவமானத்தின் எந்தக்கசப்பும்
நிராகரிப்பின்
நெருப்பை எடுத்து
ஏற்றி வைப்பேன்
வீட்டின் நடுவே ஒரு விளக்கை
திரும்பிப் பாராமல்
போனவர்களின் கால் தடம் பற்றி
தொடர்ந்து போவேன்
ஒரு சந்தேகமுமின்றி
வெளியேறச் சொன்னவர்களிடம்
நாளை மீண்டும் சந்திப்போம்
என்பதன்றி வேறொன்றும்
சொல்லத் தோன்றியதில்லை
இன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்
எவ்வளவு பனி
எவ்வளவு நட்சத்திரங்கள்
எவ்வளவு தனிமை
எவ்வளவு இயலாமைகள்
ஒரு வருத்தமில்லை
ஒரு துளிக்கண்ணீரில்லை
இன்றென்னைக்
கொல்வதெல்லாம்
உன்
கருணையிலிருந்து பிறக்கும்
ஒரு கனிவு
ஒரு
கடமையிலிருந்து
உதிக்கும்
உன் பரிவு
- மனுஷ்ய புத்திரன்
நீராலானது
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது நீராலானது, manushya puththiran on நவம்பர் 5, 2006 | Leave a Comment »
மனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ தொகுப்பில் உன்னோடிருத்தல், தன்னோடிருத்தல், பிறறோடிருத்தல்னு மூன்று பகுதிகளா கவிதைகள் பிரிக்கப்பட்டிருக்கு. அருமையான தொகுப்பு. அதிலிருந்து கவிதைகள் சில…
ஓர் அற்புதத்திற்காக
———————
ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை
அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன
ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்
இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்
இழந்த காதல்
————–
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
கசங்குதல்
———–
இன்று
உன்னுடையதுபோலவே இல்லை
உன் பிரியம்
என்றாலும்
நான் [...]