முதல் பகுதி
காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்…..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். [...]
‘மொழிபெயர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு
அலையுடனான வாழ்க்கை – 2
Posted in Octavio Paz, சிறுகதை, மொழிபெயர்ப்பு on நவம்பர் 10, 2009 | Leave a Comment »
அலையுடனான வாழ்க்கை – 1
Posted in Octavio Paz, சிறுகதை, மொழிபெயர்ப்பு on நவம்பர் 5, 2009 | 1 மறுமொழி »
நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர [...]
பெண் எழுத்தாளர்களின் புதிய முயற்சி
Posted in அறிமுகம், பெண் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பு on செப்டம்பர் 23, 2009 | 9 மறுமொழிகள் »
உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.
பெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது [...]
போர் கடுமையாக உழைக்கிறது
Posted in Dunya Mikhail, மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது கவிதைகள், துன்யா மிகேல், war poems on ஆகஸ்ட் 3, 2009 | Leave a Comment »
நன்றி : எஸ்.ராமகிருஷ்ணன், http://www.dunyamikhail.com/, http://iraq.poetryinternationalweb.org/, http://www.wordswithoutborders.org/
தன்யா மிகேல் (Dunya Mikhail) பாக்தாத், இராக்கில் 1965ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது மிச்சிகனில் வசித்து வருகிறார். இதுவரை அரபி மொழியில் நான்கு கவிதை தொகுப்புகளும், ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு அவருக்கு ‘UN Human Rights Award for Freedom of writing’ வழங்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகம் ‘போர் கடுமையாக உழைக்கிறது’ (“The War Works Hard”) என்ற நூலை 2005ஆம் ஆண்டின் சிறந்த [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 6]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on மார்ச் 12, 2008 | Leave a Comment »
நான் இதுபோன்ற கருத்துப்பொருளைப்பற்றி (abstract) யோசிப்பதே இல்லை. எனக்கு திடமான, குறிப்பான, வாழ்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை மட்டும் கையால வேண்டும். எனக்கு எதற்கு தத்தவம் என்று பலரும் சொல்வதை போல் நீங்கள் இப்போது சொல்லக்கூடும். உங்களுக்கு என்னுடைய பதில் : திடமான, குறிப்பான, வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை கையாள….அதாவது இப்புவியில் வாழ முடிவதற்கு தத்துவம் அவசியமானது.
நான் எப்போதுமே தத்துவத்தால் வசப்படவில்லை என்று பலரும் இப்போது சொல்லலாம். நீங்கள் சொல்வதை சற்றே சரிபார்க்க சொல்கிறேன். எப்போதாவது இவற்றை நினைத்து [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 5]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on மார்ச் 3, 2008 | 1 மறுமொழி »
இவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ – தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம். நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்கூடியது. நன்னெறி இல்லது அறம் என்பது மனிதனின் விருப்பங்களையும் செயல்களையும் வழிகாட்ட விளக்கப்படும் சன்மார்கங்களாகும், அதாவது வாழ்க்கையின் முறையான பாதையை தீர்மானிக்கும் விருப்பங்களையும் செயல்களையும்.
எங்கே இருக்கின்றேன் என்பதனையும் [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 4]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on பெப்ரவரி 13, 2008 | 7 மறுமொழிகள் »
எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்? மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?
2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா?
3. பகுத்தறிவு [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 3]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on ஜனவரி 30, 2008 | 1 மறுமொழி »
மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது. அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண்.
உதாரணத்திற்கு தத்துவம் நீங்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் வழியை கொடுக்குமே தவிர நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லாது. அவை உங்களுக்கு கூறுவது இவற்றை தான் :
1. நீங்கள் [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 2]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on ஜனவரி 28, 2008 | 2 மறுமொழிகள் »
இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.
1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?
மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக [...]
Philosophy : Who needs it – Ayn Rand [Part 1]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on ஜனவரி 21, 2008 | 1 மறுமொழி »
அயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது.
தத்துவம் : யாருக்கு தேவை – அயன் ராண்ட்
ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை – மார்ச் 6, 1974
நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.
நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத [...]