நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.
எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல [...]
‘ரசித்த கவிதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
வலியோடு முறியும் மின்னல் – பிரான்சிஸ் கிருபா
Posted in பிரான்சிஸ் கிருபா, ரசித்த கவிதைகள், வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது kavithai on செப்டம்பர் 3, 2009 | 4 மறுமொழிகள் »
கூட்டாஞ்சோறு
Posted in கல்யாண்ஜி, சித்தர் பாடல்கள், மனுஷ்ய புத்திரன், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள், விக்ரமாதித்யன் on மே 5, 2008 | 6 மறுமொழிகள் »
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
- சித்தர் சிவவாக்கியர்
சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் [...]
திரும்பாத முத்தம் – மனுஷ்ய புத்திரன்
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது கடவுளுடன் பிரார்த்தித்தல், manushya puththiran on ஆகஸ்ட் 20, 2007 | 1 மறுமொழி »
திரும்பாத முத்தம்
————————————–
இடப் படாத முத்தமொன்று
இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
வந்தமர்ந்தபோது
பனிக் காலத்தின் ஆயிரம்
உறைந்த கண்கள்
அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்
தன் கூச்சத்தின்
இறகுகளைப் படபடவென
அடித்துக்கொண்டது
திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்கு
தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்
இடப்படாத அந்த [...]
பெயரற்ற யாத்ரீகன்
Posted in ஜென் கவிதைகள், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள் on ஜூன் 28, 2007 | 1 மறுமொழி »
சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுகச் சிறுக
விடுத்துச் செல்வது
சாம்பலை மட்டுமே
****
நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிகொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்
****
பாறைக்கருகில் நிற்கும்
ஊசியிலை மரமும் தன்
ஞாபகங்களைக் கொண்டிருக்கிறது
போலும் ; ஓர்
ஆயிரம் வருடங்கள் கழித்தும்
அதன் கிளைகள்
தரையைநோக்கி
எப்படி வளைகின்றன பாரேன்.
****
திட்டவட்டமான விதிகள் இல்லை
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி
இதெல்லாம்,
நிலவோ பனியோ
தம் நிழல்களை எவ்விதம்
படியவைக்கின்றன என்பதைப்
பொறுத்தது
****
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
- ஜென் கவிதைகள்
தமிழில் – யுவன் சந்திரசேகர்
உறவு
Posted in சுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் on மே 24, 2007 | Leave a Comment »
உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.
**************************************************
இந்த வாழ்க்கை
———————-
இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?
என்னை [...]
கசையடிக்காரன் – யுகபாரதி
Posted in யுகபாரதி, ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது தெருவாசகம் on ஏப்ரல் 4, 2007 | 1 மறுமொழி »
உன்னையொருவன் தாக்குகையில்
உணர முடியும் பகையென்று
தன்னைத் தானே தாக்குமிவன்
தன்மைக்கிங்கே யாது பொருள்?
அடிமேலடிகள் விழுந்துவிட
அம்மிக்கல்லு நகருமெனில்
முடிவேயின்றி இவன் தன்னை
முட்டிக்கொள்வது சோகரசம்
இன்னொரு கன்னம் காட்டிடுக
இயேசு சொன்னது அமைதிக்கு
தன்னுயிர் சொட்ட தாக்குமிவன்
தருகிற தகவல் வறுமைக்கு
கண்ணடி பட்டால் காதலெனும்
கவிதைகளுண்டு ரசிப்பதற்கு
தண்டனைபோல கசையடித்து
தட்டுகளேந்தும் நிலையெதற்கு?
கதிரடி பட்டால் நெல் குவியும்
கணக்கு உள்ளது வயற்காட்டில்
முதலடி பட்டால் நஷ்டம்வரும்
மூத்தோர் சொல் மனக்கூட்டில்
தன்னைப்போல பிறவுயிரை
தரிசிக்கத்தானே வேண்டுமென
தன்னைத் தாக்கி உலகியலைத்
தண்டிக்கிறானோ? புரியவில்லை
இன்னொரு ஜென்மம் வந்தாலும்
இப்படியே நாம் அடிபடுவோம்
என்பதைச் சொல்லித் தரத்தானோ
எதிரே வருகிறான்? தெரியவில்லை
அன்னைதந்த பால்முழுதும்
அய்யோ வழியுது உடலெல்லாம்
முன்னம் யாரோ செய்தபிழை
முற்றிவிட்டது தெருவெல்லாம்
சலங்கை கட்டிய [...]
சாகா இறப்பு
Posted in சுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் on மார்ச் 26, 2007 | 1 மறுமொழி »
அவன் விடைபெற்றுக்கொள்ளும் நிமிடங்கள்
என் மனத்தில் துடிக்கத் தொடங்கவே
பரபரத்து ஓடினேன் பார்க்க
அப்போது அவன் சூன்யத்தில்
ஆனந்த ஓய்வுகொண்டிருந்தான்
புழு அவனைத் தின்றுக்கொண்டிருக்கும் நிலையிலும்
கண்களில் உயிரின் பிரகாசம் மின்னிற்று
ஆனந்த ஓய்வில் அவன் எழுதியிருந்த கவிதையை
- கடைசி வரிகளா அவை – பார்த்தேன்
மரக்கிளைக் குருவி ஒன்று அருவியைப் பார்ப்பது போல்.
மரணம் இறங்கும் விதத்தைப் பார்க்கிறான்
அதற்கு மேல் ஒரு மயிரிழை இல்லை
ஈரக்கசிவு இல்லை இன்னும் கொஞ்சம் எனும் இரங்கல் இல்லை
கடைசிப் புள்ளியில் தளம் கட்டும் துக்கம் இல்லை.
ஆற்றாமை என் தொண்டையை அடைக்க
இழை அறாது என் மனதில் [...]
மனப் பெண் – பாரதியார்
Posted in பாரதியார், ரசித்த கவிதைகள் on மார்ச் 12, 2007 | 2 மறுமொழிகள் »
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதிய காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் [...]
இவ்விடம் – சல்மா
Posted in சல்மா, ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது ஒரு மாலையும் இன்னொரு மாலையும், salma on டிசம்பர் 21, 2006 | 3 மறுமொழிகள் »
இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
- சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)
அது குழந்தை – சுந்தர ராமசாமி
Posted in சுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் on டிசம்பர் 19, 2006 | Leave a Comment »
மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
மூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும் குழந்தைப்போல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான் என்று சொல்லிச் சிரித்தது
- சுந்தர ராமசாமி (தொகுப்பு – சுந்தர ராமசாமி கவிதைகள்)