Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘வைரமுத்து’ பகுப்புக்கான தொகுப்பு

அமர்களம் படத்தில் வரும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ & ‘மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு’ என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்ற தொகுப்பில் இருக்கும் ‘கேள் மனமே கேள்’ & ‘பெயர் சொல்ல மாட்டேன்’ கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது ‘பெயர் சொல்ல மாட்டேன்’.
பெயர் சொல்ல மாட்டேன்
———————————-
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு – சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது.  ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான்.  தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான். 
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா? 
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நூல் – இதனால் சகலமானவர்களுக்கும் (கட்டுரை தொகுப்பு)
ஆசிரியர் – வைரமுத்து
முதற்பதிப்பு – 1992
வாசித்த வைரமுத்துவின் கட்டுரை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘இதனால் சகலமானவர்களுக்கும்’.  அதன் முன்னுரை…
மனிதர்களே!
இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.
உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.
ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள். 
உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.
பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் [...]

முழு பதிவையும் வாசிக்க »

‘பெய்யெனப் பெய்யும் மழை’ தொகுப்பில் ரசித்த கவிவரிகள்…
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
****
வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்
வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்
வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்
எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்
உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்
பழைய வார்த்தைகள் பறித்துப் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நூல் : பெய்யெனப் பெய்யும் மழை
கவிஞர் : வைரமுத்து
முதற்பதிப்பு : 1999
நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பெய்யெனப் பெய்யும் மழை’. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.
முன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்….
காலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை
வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது .
***
கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது – ஒரு
குழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது – ஒரு ஞானியின் மனம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் [...]

முழு பதிவையும் வாசிக்க »