Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Rudyard Kipling’ பகுப்புக்கான தொகுப்பு

எனின்
உனைப்பற்றிய நல்லவைகளை அழித்து,
பழி போடப்பட்டாலும்,
நீ தலைகவிழாமல்
நேராக இருக்கமுடியுமெனின்
உனை அனைவரும் சந்தேகித்தாலும்,
சந்தேகிக்கும் உரிமையையும் கொடுத்து
உன்மீது நம்பிக்கையிழக்காமல்
உன்னால் இருக்கமுடியுமெனின்
காத்திருக்கமுடியுமெனின்,
உன்னால் காத்திருப்பில்
சோர்வடையாமல் இருக்கமுடியுமெனின்
உன்னிடம் பொய்கள் சொல்லப்பட்டாலும்
நீ பொய்களுடன் வாழவில்லையெனின்
உனை வெறுத்தாலும்
நீ பிறரை வெறுக்க வழிகொடாமலிருக்கிறாயெனின்
***
கனவுகள் காணமுடியுமெனினும்
உன் கனவுகள்
உனை அடிமையாக்காமலிருக்குமெனின்
சிந்திக்க முடியுமெனினும்
உன் எண்ணங்கள் மட்டுமே
உனது குறிக்கோள்களில்லையெனின்
வெற்றித்தோல்விகளை
எதிர்கொள்ளவும்
அவற்றை சமமாக பாவிக்கவும் முடியுமெனின்
கபடர்கள்
பைத்தியக்காரர்களுக்கு சூட்சம வலைவிரிக்க
நீ சொன்ன உண்மைகளை
திரித்து கூறுவதை கேட்டும்
மனதிடத்தோடிருக்கமுடியுமெனின்
நீ உயிர்கொடுத்து
உருவாக்கியவைகளைச் சிதைத்து
பின் தரக்குறைவான சீர்கெட்ட பொருட்களால்
அவை மீண்டும் உருவாக்கப்படுவதை பார்த்தும்
நிதானமாயிருக்க முடியுமெனின்
***
உனது மொத்த வெற்றிக்குவியல்களை
இடர்வரவினால் பணையம் வைத்து
அத்தனையும் தோற்று
மீண்டும் ஆரம்பத்திலிருந்து
தொடங்கமுடியுமெனின்
இழந்தவைகளைப் பற்றி
பெருமூச்செறியாமல் இருக்கமுடியுமெனின்
உனக்கென [...]

முழு பதிவையும் வாசிக்க »