செடிகளும் மரங்களும்
மண்ணரிப்பைத் தடுக்குமென்று
நீரூற்றி
உரமிட்டு
பதமாக வளர்த்த
மரங்களின் கிளைகளை
தன் இருப்பை உணர்த்தியபடி
அசைத்துக்கொண்டிருக்கும் காற்று
கண்ணாடி சன்னல் வழி
பார்த்துக் கொண்டிருக்குமெனக்கு
ரகசியமாய் கூறிற்று
மண்ணிற்கு
எவ்வேரிடத்தும்
அகப்பட்டுவிடாமல்
தான் அலைக்கழிக்கும்
திசை நகர்ந்து கொண்டிருக்க
விருப்பமென்று
விழைவு
ஜூலை 7, 2009 nathiyalai ஆல்
aahaa…
கவிதை ஆழ்ந்த சிந்தனையை தருது. ஏதோ நினைச்சி என்னவோ செய்து, அது ஏதோவாக முடியும்.
நல்லா எழுதி இருக்கீங்க நதியலை.
மண்ணின் விருப்பு வெறுப்பு அறியாமல், நல்லது செய்கிறோம் என நினைத்துக் கொண்டு மண்ணரிப்பை தடுக்க நாம் யார்,
இப்படி தான் நேசமெனும் பெயரில் பல வன்முறைகளை பலரிடம் நாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இதை அருமையாக இந்தக் கவிதையில் பதிவு செய்திருக்கிறீர்கள்
நன்றி முபாரக், உயிரோடை & யாத்ரா.
நதியலை,
விழைவு கவிதை உணர்த்தும் உள்ளாழ்ந்த படிமம் புரிகிறது. வரியமைப்பு சற்றே மாறியிருந்தால் வாசிப்பின் சுவை கூடியிருக்கும் என்று கருதுகிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நல்லாயிருக்குங்க!
கருத்துக்கு நன்றி அகநாழிகை & சென்ஷி
நம்மைப்போன்ற மண்ணுகளுக்கு காற்று சொல்லித்தான் புரியவேண்டியிருக்கிறது 🙂