என்றுமே நிறைந்திடாத
உள்ளடுக்குகளின் இருப்பை
எவ்விடுக்குகளிலும்
கசிய விடாது
பத்திரப்படுத்துமென்
விழிப்புணர்வை
அறிந்தே அவளும்
ஊற்றிச்சென்றாள்
அவை
பாறைகளில்
திட்டுத்திட்டாக தேங்கி
காற்றுக்கு தளும்பும்
மழைநீராகின்றது
ஜூலை 8, 2009 nathiyalai ஆல்
Nandru !!!!
அய்யோ என்னம்மா கண்ணு அசத்தற.
நல்லா இருக்கு. புரியவும் செய்யுது.
ரொம்ப நல்லா இருக்கு
gud one!!
அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் நதியலை. சொற்கட்டுகளில் இன்னும் கவனம், இறுக்கம் இருந்தால் நன்று
//என்றுமே நிரைந்திடாத
உள்ளடுக்குகளின் இருப்பை//
மாதவி ??? (கண்ணகியும்)
//எவ்விடுக்குகளிலும்
கசிய விடாது
பத்திரப்படுத்துமென்
விழிப்புணர்வை//
கண்ணகி???
//அறிந்தே அவளும்
ஊற்றிச்சென்றாள்//
அவ்வை, ஆண்டாள்
//அவை
பாறைகளில்
திட்டுத்திட்டாக தேங்கி
காற்றுக்கு தளும்பும்
மழைநீராகின்றது//
திருப்பாவை, சிலப்பதிகாரம் (மாதவி)
வாழ்த்துக்கள்.
நதியலை,
கவிதை நன்றாக இருக்கிறது.
000
‘வசுமித்ர‘ அளித்திருக்கும் விளக்கம் மிகையானதாக இருக்கிறது.
000
//நிரைந்திடாத//
‘நிறைந்திடாத‘ என்றுதானே இருக்க வேண்டும் ?
000
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
கவிதையைவிட வசுமித்ராவின் இடையீடு அருமை. இந்த கவிதையின் உள்ளடுக்கில் இப்படி ஒன்று இருக்கிறதோ?
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜமாலன்.
பிழை திருத்திவிட்டேன். பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வசுமித்ரா….உங்களின் பின்னூட்டம் ஆச்சரியமும் பிரமிப்புமளிக்கிறது. நன்றி.
நன்றி நதியலை, ஜமாலன் அண்ணா!
//உங்களின் பின்னூட்டம் ஆச்சரியமும் பிரமிப்புமளிக்கிறது//
உங்கள் கவிதைதான் எனக்கு பிரமிப்பூட்டும் ஆச்சரியமளிக்கிறது. 🙂