அடர்கருப்பில் ஊரடங்கி
வான் பூத்து ஒளிரும் நேரம்
துடைத்து மெழுகி
திடமாய் வைத்திருக்கும் பரப்பில்
சாம்பலாய் சுழன்று பரவும்
சக்கர நினைவுகளை
நிறம் மாற்றுமென்
பிரயத்தனங்கள் அறிந்து
அவை
நான் நெருங்கவியலா
மலையடிவார
புற்களினடியில்
தஞ்சம் புகுவதை
ஊறும் எறும்புகள்
பார்த்துச் சிரிக்கின்றன
ம்ம்ம் அருமையான நினைவுகள்.
//நிறம் மாற்றுமென்
பிரயத்தனங்கள் அறிந்து//
இந்த வரிகளில் சொல்ல வருவது.
எல்லா கவிதைக்கும் நல்லா இருக்கு சொல்ல கடுப்பா வருது நதியலை. 🙂
நல்லா இருக்கு. மேலும் எழுதும்மா
//சாம்பலாய் சுழன்று பரவும்
சக்கர நினைவுகளை//
முதல் காதல் 🙂
என்னதான் சமூகமும், குடும்பமும் கட்டுப்படுத்தினாலும் நினைவுகளைக் கட்டிவைக்கமுடியவில்லைதானே
//ஊறும் எறும்புகள்
பார்த்துச் சிரிக்கின்றன//
சேர்வதற்கு முயற்சித்திருக்கலாமோ?
விவரிக்க இயலா மர்ம உணர்வுகளை அற்புதமான சித்திரமாகத் தீட்டிவிடுகிறீர்கள்.
நதியலை,
எனக்கு நானே எனது அனுபவங்களை அல்லது மாயைகளை உங்கள் கவிதைகள் மூலம் பொருள்படுத்தி, வாசித்துக்கொள்கிறேன். தவறாக/அதிகப்பிரசிங்கித்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மன்னிக்கவும்.
iyalbaana yethaarthamaana azagaana kavithai. kalakunga-:)
நன்றி உயிரோடை, வசுமித்ரா & பாஷா