இலைகள் உதிரா மரம்
இருக்கத்தான் செய்கின்றது
எல்லோரிடத்தும்
ஓர் கதை
பொதுவில் சொல்லவும்
மறைத்துச்சொல்லவும்
ரகசியமாய் சொல்லவும்
தனக்குள் சொல்லிக்கொள்ளவும்
அதன்
வடிவமும் முடிவும்
மட்டுமே மாறி மாறி
வதைபட்டுக்கொண்டிருக்க
இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்?
//இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்?
//
அருமை
Hi
Gr8 to read good tamil..
wonderful, yet a bit complicated poem. Reminds me of the modern art – leaving the interpretation to the viewer/reader!
I am not a great tamil literate. However, was just wondering that simpler expression at the end might be more appealing. The last paragraph – too many adjectives. Are you referring to the heart which is ladden with so many untold stories? mmmm… simpler , better reach for pamara makkal like adiyen!!!
Neela.S
>>எதுவாக இருந்துவிடமுடியும்?
எதுவாகவும் இருக்கலாம்-:)
நல்ல கவிதை பாராட்டுக்கள்
//இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்//
அழுத்தமான வரிகள் கிளர்த்தும் அனுபவம் விரிந்தபடி…