களஞ்செதுக்குதல்
நம்பிக்கைகள் பொய்த்துப்போன
ஓர் உச்சி வேளையில்
நினைவுகளில் நீந்தவும்
திராணியில்லாமல்
களஞ்செதுக்கப்படுகிறது
திரளும்
அன்பையும் வெறுப்பையும்
உணர்ந்து கொள்ள
சிறு கால அவகாசமோ
இடைவெளியோ
தேவையாய் தான் இருக்கின்றது
மண்வெட்டிகளின் அவசியம்
உணரும் போது
இறுக்கங்களை தளர்த்தும்
மண்புழுக்கள்
பிரதானப்படுவதேயில்லை
********************************
தூண்டாவிளக்கு
பதில்களுக்கான கேள்விகளற்றும்
தீர்மானங்களுக்கான சிந்தனைகளற்றும்
விரிந்து கொண்டுள்ள
எழுத்தின் இயல்புகளை
ரகசியங்களென்று
திரிக்கத் தெரிந்திருக்கிறது
யாவருக்கும்.
காலங்காலமாய்
தூண்டாவிளக்குகள்
எரிந்து கொண்டேதானிருக்கின்றன
எல்லா விழித்தலிலும்
பார்த்தல் சாத்தியம் என்கிறீர்கள்
நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி
பதில்களுக்கான கேள்விகளற்றும்
தீர்மானங்களுக்கான சிந்தனைகளற்றும்
விரிந்து கொண்டுள்ள
எழுத்தின் இயல்புகளை
ரகசியங்களென்று
திரிக்கத் தெரிந்திருக்கிறது
யாவருக்கும்.
காலங்காலமாய்
தூண்டாவிளக்குகள்
எரிந்து கொண்டேதானிருக்கின்றன
எல்லா விழித்தலிலும்
பார்த்தல் சாத்தியம் என்கிறீர்கள்
நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி
//நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
ஏதோ உடையுது ;(
இரண்டு கவிதைகளும் நன்றாக உள்ளன.
//நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி//
இவ்வரிகள் அருமை.
//மண்வெட்டிகளின் அவசியம்
உணரும் போது
இறுக்கங்களை தளர்த்தும்
மண்புழுக்கள்
பிரதானப்படுவதேயில்லை //
இந்த மண்புழுக்கள் எதுவாகவும்/யாராகவும் இருக்கலாம்
இப்படி எத்தனை மண்புழுக்களை பிரதான்ப்படுதாமல் மறந்திருக்கிறேன்..
இரு கவிதைகளும் மிக பிடித்திருந்தது, நதியலை அவர்களே..
பாராட்டுக்கள்..