Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அறிவுமதி’ Category

‘ஆயுளின் அந்திவரை’ தொகுப்பில் கிட்டதட்ட 55 குட்டிக்கவிதைகள் உள்ளன. அதில் எனை ஈர்த்த இரு கவிதைகள்…

தோழி
சந்தைக்குப் போனால்
எனக்காகக்
கொஞ்சம்
தூக்கம்
வாங்கிவா

கனவுகள் ஒன்றிரண்டு
கலந்திருந்தால்
வரும்
வழியிலேயே
பொறுக்கிப் போட்டுவிடு

*****************

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே

வா

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே

Read Full Post »