Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Sidney Sheldon’ Category

Title : The Best Laid Plans
Author : Sidney Sheldon
Pages : 358 Pages

இக்கதையை ஒரே வாக்கியத்தில் முடித்து விடலாம்.  காதலித்தவன் (Oliver Russell) தன்னை மணக்காமல் அவனுடைய அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வேறொருத்தியை மணந்ததால், காதலனை பழிவாங்க துடிக்கிறாள் காதலி (Leslie Stewart).  இச்சாதாரண விஷயத்தை எப்படி சுவாரிஸ்யமாக சொல்ல முடியும்.  அதுதான் ஷெல்டனின் திறமை.  மர்மங்களும், போர்களும், திருப்பங்களும் நிறைந்த இக்கதைய படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் இதனுள் மூழ்கிப்போவோம். 

ஒரு விளம்பர அலுவலகத்தில் வேலை பார்க்கும் Leslie Stewart, தன் காதலனை பழிவாங்கும் ஒரே நோக்கத்துடன், திடமனத்துடன் தன் அறிவாலும் உழைப்பாலும் உயருகிறாள்.  ஒரு சிறு பத்திரிக்கை அலுவலகத்தை வாங்கி அங்கிருந்து படிப்படியாக முன்னேறி நாட்டிலுள்ள முக்கிய பத்திரிக்கைகளை தன்வசம் கைபற்றுகிறாள். அதே வேகத்தில் Oliver Russell தன் அரசியல் வாழ்க்கையில் முன்னேறி ஜனாதிபதியாகிவிடுகிறார். அதன்பின் எவ்விதத்தில் தன் காதலனை பழிவாங்குவாள் என்ற ஆர்வத்துடனே பக்கங்கள் நகர்கிறது.  

இவர்கள் கதையை தவிர்த்து கதைக்குள் கதையாக(sub plot) சுவாரிஸ்யமான கதாப்பாத்திரத்தின் (Dana Evans) கதை, கதையை வேகமாக எடுத்துச்செல்கிறது.  Dana Evansன் துணிச்சலும், போர் நடக்கும் சரஜீவோவில் செய்தி சேகரிப்பதற்காக அவள் எதிர்கொள்ளும் அபாயங்களும்,  அனாதையாக்கப்பட்ட ஒரு கையை இழந்த சிறுவனை அங்கிருந்து தத்தெடுத்து வந்து வளர்ப்பதும் மனதை தொடுகிறது. இதன் தொடர்ச்சியாக, Dana Evans கதையை முதன்மைபடுத்தி ஷெல்டணின் ‘The Sky is Falling’ வெளிவந்தது.  The Sky is Falling பற்றி தனிப்பதிவு பிறகு இடுகிறேன். 

நதியலை

Read Full Post »