Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நா. முத்துக்குமார்’ Category

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.

மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு

மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

– நா. முத்துக்குமார் (தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)

Read Full Post »