Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Paulo Coelho’ Category

Book :  The Alchemist
Author : Paulo Coelho
Pages : 177
First Edition : 1988

Alchemist
எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது.  அது பலசமையங்களில் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும், வாட்டி வதைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டும், நம் இயலாமைகளை கண்டு சிரித்தும், சகித்தும், பலவகை குழப்பங்களை அலசியெடுத்து தீர்வு கொடுத்தும், பின் அத்தீர்வை தொடரவிடாமல் குழப்பியும், நம் இருப்பிற்கு முரண்பட்ட பலவகை ஆசைகளை வளர்த்தும், அதில் சுகிக்கத்தூண்டியும் பின் அதை நிறுத்த கோஷமிட்டும்….. இப்படி அடங்காமல் தொல்லை செய்யும் இதயத்தின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தால் என்னாவது? ஆனால் ‘The Alchemist’ என்ற கதை, இதயத்தின் பேச்சை கவனித்துக் கேளுங்கள், அது காட்டும் திசையிலேயே தொடருங்கள், அது உங்களுக்கு உகந்ததையே காட்டும் என்கிறது.

மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கும் இக்கதையை இரண்டு பக்கங்கள் படித்து முடிக்கும் முன்பே இது ஒருவேளை சிறுவர்களுக்கான புத்தகமோ என்று எண்ணவைக்கிறது.  ஒர் இடையன் தான் செய்யும் வேலையை மிகவும் விரும்பி செய்கிறான். ஊர் ஊராக சென்று தன் ஆடுகளை விற்கிறான். சந்தோஷமாக கழிகின்றது அவனது நாட்கள். பொழுது போவதற்கு புத்தகங்கள் வாசிக்கிறான். எகிப்த் பிரமிடுகள் இருக்கும் இடத்தில் புதயலை கண்டுபிடிப்பதாக இரண்டு முறை அவனுக்கு கனவு வருகிறது. அவன் இதயம் பேசும் மொழியை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்குகிறான்.  அது போதிக்கும் வழியிலேயே முடிவுகளை எடுக்கிறான். அக்கனவை நம்பி எகிப்த் பிரமிடுகளை நோக்கி பயனிக்கிறான்.  அவன் பயணம் பலவிதமான அனுபவங்களும், ஆச்சிரியங்களும் நிறைந்ததாக இருக்கின்றது. சுவாரிஸ்யமான மனிதர்களை சந்திக்கிறான், வாழ்க்கை பாடங்களை அறிகிறான், உலகத்திலுள்ள பல அதிசயங்களை கண்டு வியக்கிறான், காதல் வயப்படுகிறான்.  அவ்வாறாக அவன் தொடரும் பயணத்தில் புதயலை கண்டுபிடிக்கிறானா இல்லையா என்பதுதான் கதை.

படித்து முடித்த பிறகு அத்தனை திருப்தியாக இல்லையெனினும் இதுபோன்ற புத்தகங்கள் பதின்வயது பிள்ளைகளுக்கு ஏற்றதாக, சித்தனையை வளர்க்கும் விதமாக இருக்குமெனத்தோன்றியது.  நம்பதுவதற்கு அப்பாற்பட்டு பல விஷயங்கள் இப்புத்தகத்தில் இருக்கிறதெனினும் அது சொல்லும் கருத்தும் சொல்லிய விதமும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.  இதில் ரசித்த வரிகள் சிலவற்றை தெரிந்த வகையில் தமிழில் எழுதியுள்ளேன்.

  • வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்களே மிகவும் அபூர்வமானவை.
  • வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நமக்கு நடக்கும் விஷயங்களில் கட்டுப்பாட்டை இழந்து, விதியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குகிறோம்.  இதுதான் உலகத்தின் மிகப்பெரிய பொய்.
  • தன் இலக்கை அறிவதே மனிதனின் மிக முக்கிய கடமையாகும்
  • நீ அடைய நினைப்பதை, அடையும் முன்னமே பணயம் வைக்க தொடங்கினால், அதை அடைய உழைக்கவேண்டும் என்ற வேட்கையை நீ இழப்பாய்.
  • எவ்வாறாக இருக்கிறதென்பதல்லாமல் எவ்வாறு இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேனோ அவ்வாறாகவே உலகத்தை காண்கிறேன்
  • ஒவ்வொரு நாளும் தனக்குள் கொண்டு வருதிறது ஒரு அழிவின்மையை.
  • துன்பப்படுவோமோ என்ற பயமே துன்பத்தை விடவும் மோசமானது
  • நேசிக்கப்படும்போது, என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.  ஏனெனில் அவையனைத்தும் உங்களுக்குள்தான் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

******************

  • Its the simple things in life that are the most extraordinary
  • It’s this : that  at a certain point in our lives, we lose control of whats happening to us, and our lives become controlled by fate.  Thats the world’s greatest lie.
  • To realise one’s destiny is a person’s only real obligation
  • It you start out by promising what you dont even have yet, you’ll lose your desire to work towards getting it.
  • I see the world in terms of what I would like to see happen, not what actually does.
  • Each day, in itself, brings with it an eternity.
  • One is loved because one is loved, no reason is needed for loving.
  • The fear of suffering is worse than the suffering itself.
  • When you are loved, there’s no need at all to understand what’s happening, because everything happens within you.

Paulo Coelhoவின் பிற புத்தகங்கள்….. (நன்றி – விக்கிபீடியா)

1982  Hell Archives
1986 Practical Manual of Vampirism
1987 The Pilgrimage
1990 Brida
1991 The Gift
1992 The Valkyries
1994 Maktub
1994 By the River Piedra I Sat Down and Wept
1996 The Fifth Mountain
1997 The Manual of the Warrior of Light
1998 Veronika Decides to Die
2000 The Devil and Miss Prym
2001 Fathers, Sons and Grandsons
2003 Eleven Minutes
2004 The Genie and the Roses
2005 The Zahir
2006 Like the Flowing River
2006 The Witch of Portobello

Read Full Post »