Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Ayn Rand’ Category

நான் இதுபோன்ற கருத்துப்பொருளைப்பற்றி (abstract) யோசிப்பதே இல்லை.  எனக்கு திடமான, குறிப்பான, வாழ்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை மட்டும் கையால வேண்டும். எனக்கு எதற்கு தத்தவம் என்று பலரும் சொல்வதை போல் நீங்கள் இப்போது சொல்லக்கூடும்.  உங்களுக்கு என்னுடைய பதில் : திடமான, குறிப்பான, வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை கையாள….அதாவது இப்புவியில் வாழ முடிவதற்கு தத்துவம் அவசியமானது.  

நான் எப்போதுமே தத்துவத்தால் வசப்படவில்லை என்று பலரும் இப்போது சொல்லலாம்.  நீங்கள் சொல்வதை சற்றே சரிபார்க்க சொல்கிறேன். எப்போதாவது இவற்றை நினைத்து அல்லது கூறி இருக்கிறீர்களா? 

“இவ்வளவு நிச்சயமாக இருக்காதே…யாரும் எதைபற்றியும் நிச்சயமாக இருக்கமுடியாது”
இவ்வெண்ணம் David Hume மிடமிருந்து வந்தது (இன்னும் பலரிடத்திலிருந்தும்) அவரைப்பற்றி நீங்கள் கேள்விபட்டிராவிட்டாலும்.

அல்லது :
“இவை புத்தகங்களுக்கு ஒத்துவரும் ஆனால் நடைமுறையில் செயல்படுத்த முடியாது”
இதை Plato விடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“இது மிகவும் கீழ்த்தரமான செயல், ஆனால் நாம் மனிதர்கள் தானே. இவ்வுலகத்தில் எந்த ஒரு மனிதனும் உத்தமமானவன் இல்லை” 
இதை Augustine னிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“உனக்கு இது உண்மையானதாக இருக்கலாம் ஆனால் எனக்கிது உண்மையானதல்ல”
இதை William James இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“என்னால் உதவ முடியவில்லை, அவன் என்ன செய்தாலும் எவராலும் எதுவவும் உதவ முடியாது”
இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“இது உண்மையென உணருகிறேன்…ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது நியாயமானது, ஆனால் நியாயங்கள் யதார்த்ததோடு எதுவும் செய்வதற்கில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது தன்னலம் என்பதால் இது தீயது”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

“முதலில் செயல்படுங்கள் பிறகு யோசியுங்கள்” என்று செயல்பாட்டாளர்கள் (activists) சொல்வதை கேட்டிருக்கிறீர்களா. 
இதை John Dewey இடமிருந்து பொற்றார்கள்.

இப்போது சிலர் சொல்லக்கூடும் “ஆமாம் நான் இவற்றை பலசமையங்களில் சொல்லி இருக்கிறேன், ஆனால் இவற்றை நான் என்றும்  நம்பவேண்டுமென்பதில்லை. நேற்று அவை சரியானதாக எனக்கு பட்டிருக்கலாம் ஆனால் இன்று அவை சரியானதல்ல”  இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

பலவிதமான யோசனைகளை பலவிதமான தத்துவங்களிலிருந்து அந்நேரத்திற்கு தகுந்தாற்போல் கடன் வாங்கிக்கொள்ளவோ சமாதானப்படுத்திக்கொள்ளவோ கூடாதா? என்று கேட்கலாம்.  இதை Richard Nixon இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்…அவர் Willam James இடமிருந்து.

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் – இதுபோன்ற கருத்துப்பொருளாகிய எண்ணங்களில் விருப்பமில்லையெனில், ஏன் அனைவரும் அவற்றை கட்டாயமாக பயன்படுத்த எண்ணுகிறீர்? 

…தொடரும்  

Read Full Post »

இவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ – தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம்.  நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்கூடியது. நன்னெறி இல்லது அறம் என்பது மனிதனின் விருப்பங்களையும் செயல்களையும் வழிகாட்ட விளக்கப்படும் சன்மார்கங்களாகும், அதாவது வாழ்க்கையின் முறையான பாதையை தீர்மானிக்கும் விருப்பங்களையும் செயல்களையும். 

எங்கே இருக்கின்றேன் என்பதனையும் அதை எப்படி கண்டுபிடிக்கவேண்டுமென்பதனையும் அறிந்துக்கொள்வதை தட்டிக்கழித்ததனால் என் கதையில் வரும் விண்கலவீரனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெரியாமல் போனதுபோல் நீங்கள் இருக்கும் பிரபஞ்சத்தின் இயல்பையும், அறிதலுக்குண்டான விழிகளின் இயல்பையும், உங்களின் இயல்பையும் தெரிந்துவைத்துக்கொள்ளாதவரை நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை தெரிந்துக்கொள்ள முடியாது. 

நன்னெறிக்கு செல்லும் முன்பு metaphysics & epistemology முன்னிறுத்திய கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் : மனிதன் பகுத்தறிவாளனா, உண்மையை கண்டறியும் தகுதி உள்ளவனா அல்லது பொருந்தாத செயலற்றப்போன குருடன், பிரபஞ்சத்தின் தொடர்மாற்றங்களால் தாக்கப்பட்ட ஒரு துகளா? மேன்மையான செயல்களும் சந்தோஷங்களும் இப்புவியில் இருக்கும் மனிதனுக்கு சாத்தியமா அல்லது அவன் தோல்விகளுக்கும் அழிவுகளுக்கும் விதிக்கப்பட்டவனா?  இக்கேள்விகளுக்கான பதில்களை பொறுத்து நன்னெறி எழுப்பும் கேள்விகளை சிந்திக்க தொடங்கலாம். 

1.  மனிதனுக்கு எது நல்லது? எது கெட்டது? ஏன்?
2.  மனிதனின் பிரதான அக்கறை சந்தோஷத்தை தேடுவதா அல்லது கஷ்டங்களிலிருந்து தப்பித்தலா?
3.  தன் வாழ்வின் இலக்காக மனிதன் எதனை வைத்துக்கொள்ளவேண்டும்…சுய நிறைவையா அல்லது சுய சிதைவையா?
4.  மனிதன் தன் மதிப்பீடுகளின்படி செல்லவேண்டுமா அல்லது தன்னுடையதைவிட மற்றவர்களின் விருப்பங்களையே மேலானதாக கருத வேண்டுமா? 
5.  மனிதன் மகிழ்ச்சியை நாட வேண்டுமா அல்லது சுயதியாகத்தையா? 

இவ்விரண்டு விதமான விடைதொகுப்புகளின் விளைவுகளின் வித்தியாசத்தை நான் சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.  இவற்றை நீங்கள் எங்கும் காணலாம் – உங்களுக்குள்ளும் உங்களைச்சுற்றியும். 

நன்னெறி அளித்த பதில்களிலிருந்து மனிதன் சக மனிதனை எவ்வாறு நடந்தவேண்டுமென்பது தீர்மானமாகிறது, இதுவே தத்துவத்தின் நான்காவது கிளையான ‘அரசியலை’ நிச்சயப்படுத்துகிறது.  இது முறையான சமூக ஒழுங்கின் கொள்கைகளை விளக்குவதாகும்.  தத்துவ செயல்பாட்டின் உதாரணத்தை போல, அரசியல் தத்துவம் உதாரணத்துக்கு உங்களுக்கு வாரத்தில் எந்த நாளில் எவ்வளவு எரிவாய்வு வழங்கப்படவேண்டுமென்பதை கூறாது. உங்களுக்கு எதனை எவ்வளவு வழங்க வேண்டும் என்று விதிக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டா என்பதனைக்கூறும்.

முதல் மூன்று கிளைகளை சார்ந்த தத்துவத்தின் ஐந்தாவதும் கடைசி கிளையுமானது ‘அழகியல்’.  இது கலையை பற்றிய ஆய்வாகும். கலை மனிதனின் தேவைகளை கையாளும்…அவனின் உணர்வினைத்தூண்டிவிடும்.

…தொடரும்

Read Full Post »

எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்?  மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 

1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?   

2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா? 

3. பகுத்தறிவு உண்மையை அறியும் தகுதியுடையதா அல்லது பகுத்தறிவினும் மேலான வேறு எதாவது சுட்டுணர்வை மனிதன் பெற்றிருக்கிறானா? 

4. மனிதன் நிச்சயத்தன்மையை அடையமுடியுமா அல்லது அவன் நித்தம் சந்தேகத்துடனேயே இருக்க விதிக்கப்பட்டவனா? 

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் தன்னம்பிக்கையின் அளவும் உங்கள் வெற்றிகளும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் epistemologyயின் தளம், மனிதனின் சுட்டுணர்வு வழிகளை ஆராயும் அறிதலின் கோட்பாடு.

(தொடரும்)

Read Full Post »

மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது.  அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண். 

உதாரணத்திற்கு தத்துவம் நீங்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் வழியை கொடுக்குமே தவிர நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லாது.  அவை உங்களுக்கு கூறுவது இவற்றை தான் : 

1. நீங்கள் இருக்கும் பிரபஞ்சம் இயற்கைவிதிகளுக்கு  உட்பட்டு இருக்கின்றதா…அதனால் மாற்றமுடியாததாகவும், திடமானதாகவும், நிச்சயத்தன்மையோடும் அறிந்துக்கொள்ளும்படியாகவும் இருக்கின்றதா? அல்லது வார்த்தைகளால் விளக்கமுடியாத குழப்பங்களோடு, புரிந்துக்கொள்ளமுடியாத அதிசய தேசத்தில், கணிக்கமுடியாத, அறியமுடியாத தொடர்மாற்றங்களுடன் உங்கள் மனதால் விளங்கிக்கொள்ள முடியாத இடத்தில் இருக்கின்றீகளா?

2.  உங்களைச்சுற்றி நீங்கள் காணும் அனைத்தும் நிஜமானதா அல்லது அவையெல்லாம் மாயமா?

3.  அவையெல்லாம் பார்வையாளனிலிருந்து தனித்து இயங்குகிறதா அல்லது பார்வையாளனால் உண்டாக்கப்பட்டதா?

4.  அவை பொருளா அல்லது மனித உணர்வின் எண்ணமா?

5.  அவை எப்படி இருக்கின்றதோ அப்படியேதானிருக்குமா அல்லது நம் உணர்வினால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்கக்கூடியதா? 

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் செயல்களின் இயல்பும் உங்கள் விருப்பங்களின் இயல்பும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் metaphysicsயின் தளம் – இருத்தலை உள்ளவாரே ஆராய்தல் அல்லது அரிஸ்டாடலின் வார்த்தைகளில் ‘இருப்பதை இருப்பதாகவே புரிந்து கொள்ளுதல் (being qua being) – இதுவே தத்துவத்தின் அடிப்படை கிளையாகும்.

(தொடரும்)

Read Full Post »

இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?

மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக அறிந்திருப்பினும் இல்லையெனினும் இக்கேள்விக்கான பதில்களில்தான் அவையனைத்தும் அடங்கியிருக்கிறது.

இக்கேள்விகளை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சியை அடையும் தருணத்தில் அதற்கான பதில்களையும் அறிந்திருப்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்? – இந்நகரத்தில்
2. அதை நான் எப்படி அறிவது – கண்கூடாக தெரிகிறதே
3. நான் என்ன செய்ய வேண்டும்? – இங்கே தான் நிச்சயமற்றுப்போகிறார்கள். ஆனால் பொதுவான பதில் என்னவென்றால் ‘எதை எல்லோரும் செய்கிறார்களோ அதையே’

பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சுருசுருப்பாக இல்லை, திடமான நம்பிக்கையோடில்லை, சந்தோஷமாக இல்லை, சில சமயங்களில் விலகவோ விட்டுத்தொலைக்கவோ முடியாத காரணமற்ற பயத்தையும் விவரிக்கமுடியாத குற்ற உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

கஷ்டங்கள் அனைத்தும் பதிலளிக்கப்படாத இம்மூன்று கேள்விகளில் இருந்து தொடங்குகிறதென்ற உண்மையை அவர்கள் எப்போதும் கண்டுணரவில்லை. ஒரே ஒரு அறிதல்முறை மட்டுமே அவர்களுக்கு பதிலை தரமுடியும் : தத்துவம் (philosophy).

(தொடரும்)

Read Full Post »

அயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது.

தத்துவம் : யாருக்கு தேவை – அயன் ராண்ட்

ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை – மார்ச் 6, 1974

நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.

நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத ஏதோ ஒரு கோளில் விழுந்து நொறுங்குகிறது. சுயநினைவு திரும்பும் போது உங்களுக்கு அவ்வளவு கடுமையான காயமெதுவும் படவில்லையென அறிகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எழும் முதல் மூன்று கேள்விகள் இவையாக இருக்கும்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. இதை நான் எப்படி கண்டுபிடிப்பது?
3. நான் என்ன செய்ய வேண்டும்?

வெளியே, அறிப்படாத பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள். சுவாசிக்க காற்றும் உள்ளது. சூரியஒளி உங்கள் ஞாபகத்தில் உள்ளதைவிட மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பது போலுள்ளது. வானத்தை பார்க்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் பார்க்காமல் திரும்பிக்கொள்கிறீர்கள்.

சட்டென்று தோன்றிய ஒர் எண்ணத்தால் தாக்கப்படுகிறீர்கள் – வானத்தை பார்க்காமல் இருந்தால் பூமியை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறீர்கள் என்றோ, திரும்பிச்செல்ல இயலாதென்றோ அறியாமல் இருந்துவிடலாம். இது தெரியாமல் இருக்கும் வரை உங்கள் இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துக்கொள்ளலாம். பனிமூட்டமான, இனிமையான அதே சமயம் ஒரு குற்றவுணர்வும் கொண்டதுமான ஒரு வகையான நம்பிக்கையை அனுபவிக்கிறீர்கள்.

பார்வையை உங்களிடம் உள்ள பொருட்களின் பக்கம் திருப்புகிறீர்கள். அவையெல்லாம் சேதப்பட்டிருக்கலாம். எவ்வளவு தூரம் சேதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை. சட்டென்று தோன்றிய பயத்தால் பார்ப்பதை நிறுத்திவிடுகிறீர்கள். இப்பொருட்களை நம்பி எப்படி பயன்படுத்துவது? இக்கருவிகள் கோளாராகாது என்று எப்படி நிச்சயப்படுத்திக்கொள்வது? இக்கருவிகள் வேற்று உலகத்தில் சரியாக வேலை செய்யுமா? உடனே பொருட்களிலிருந்தும் பார்வையை அகற்றி விடுகிறீர்கள்.

ஏன் எதைச்செய்யவும் இப்போது ஆர்வமில்லை என்று ஆச்சிரியப்படுகிறீர்கள். எதாவது எப்படியாவது தானாக நிகழ்வதற்கு காத்திருப்பதே பாதுகாப்பானது எனத்தோன்றுகிறது. விண்கல ஓடத்தை அசைக்காமல் இப்படியே இருப்பதுதான் நல்லதென எண்ணுகிறீர்கள். வெகுதொலைவில் உயிருள்ள ஒருவகையான ஜீவராசிகள் உங்களை நோக்கிவருவதை பார்க்கிறீர்கள். அவர்கள் மனிதர்களா எனத்தெரியவில்லை, ஆனால் இரண்டு கால்களுடன் நடந்து வருகிறார்கள். நிச்சயம் அவர்கள் உங்களிடம் வந்து நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார்களென தீர்மானிக்கிறீர்கள்.

பிறகெப்போதும் உங்களை பற்றிய தகவல்களே இல்லை.

(தொடரும்)

Read Full Post »

Book :  We the Living 

Author : Ayn Rand 

Pages : 446

First Edition : 1936
அயன் ராண்டின் நூற்றாண்டினையொட்டி வெளிவந்த பதிப்பு

The Fountain Head உயரத்தில் இப்புத்தகம் இல்லையெனினும் இதையும் அயன் ராண்டின் மிகச்சிறந்த படைப்பென்றே சொல்லலாம். 

ரஷ்ய புரட்சிக்கு பின் நிகழும் சம்பவங்களின் பின்னனியில்…அருமையான கதை, எதிர்ப்பார்த்திடாத முடிவு, கூர்மையான வாக்கிய அமைப்புகள், மனதை உலுக்கும் நிகழ்வுகள், அதை விவரித்த விதங்களென பல அற்புத அம்சங்களை கொண்ட புத்தகம், இதை கதையென்றே பார்க்க முடியவில்லை, ஒரு நிஜ சம்பவமாகவே உணரத்தோன்றுகிறது.  கிரா, அவளின் காதலன் லியோ, நண்பன் அண்டிரி இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை. 


ஒரு ராணுவ அதிகாரியின் மரணத்தில் தொடங்கி கதையில் வரும் அனைத்து மரணங்களும் சொல்லப்பட்ட விதம் மிகவும் அருமை. அம்மரணங்களின் தாக்கத்தை வார்த்தைகளால் நம்முள் சர்வசாதாரணமாக இறக்கிவைத்து அதை கடந்து செல்ல சிரமமாக்கி விடுகிறார் அயன்ராண்ட்.  மரணத்தையொத்த சம்பவம் ஒன்றும் அதே போல விவரிக்கப்படுகிறது.  சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் திரும்பி வருவதில்லை, அங்கு என்ன ஆகிறார்கள் என்ற தகவலும் இல்லை. எதிர்புரட்சி செய்த காரணத்தினால் ஒருவனை பத்து வருடம் சைபீரிய சிறைக்கு அனுப்புகிறார்கள். செல்ல வேறு இடமின்றி மறைவாக இருக்க தன் காதலி ஐரினா வீட்டில் இறுதியில் அவன் தங்கியிருந்ததினால், அவனுக்கு உதவி செய்த காரணத்திற்காக, அவன் செயல்களில் அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லையெனினும் அவளுக்கும் பத்து வருட சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.  சிறைக்கு செல்லும் முன் கிராவிடம் இவ்வாறாக ஐரினா பேசுகிறாள்

“நான் பயப்படவில்லை…விட்டுவிட்டேன்….எதையோ புரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளவுதான்.  ஆனால் அதை எவராலும் விளக்க முடியுமெனத் தோன்றவில்லை.  இதுவே என்னுடைய முடிவென எனக்குத்தெரியும். தெரிந்தும் என்னால் இதை நம்ப முடியவில்லை, உணரமுடியவில்லை…வினோதமாக இருக்கிறது.  வாழ்க்கை வாழக்கிடைக்கிறது….மிக உன்னதமானது…அரியது…மிகவும் அழகான ஒரு புனிதப்பொக்கிஷத்தைப்போலானது என்றெண்ணி வாழத்தொடங்குகிறோம்.  யாருக்கும் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல் அது இப்போது முடிவடைகிறது. அதற்காக அவர்கள் வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார்கள் என்றில்லை. எனதான இப்பொக்கிஷத்தை பற்றியும், இதில் புரிந்துக்கொள்ள எதுவோ இருக்கின்றதென்றும் அவர்களுக்குத் தெரியாது அவ்வளவுதான்.  அது என்னவென்று என்னாலும் புரிந்துக்கொள்ள இயலவில்லை.  ஆனால் நம் அனைவராலும் புரிந்துக்கொள்ள வேண்டிய எதுவோ ஒன்று இருக்கிறது…அது என்ன? என்ன?”

அத்தண்டனையை தடுக்க அவளின் தந்தை எல்லா முயற்சிகளும் செய்து தோற்கிறார்.  பாசமான தந்தை தன் பிள்ளைகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதை இவ்வரிகள் உணர்த்தும்.


“இது அத்தனை குதூகலமான இடம் கிடையாது.  வாழ்வில் எதையுமே எதிர்ப்பார்க்கவியலா நிலையில் இங்கு தங்களிடம் கடைசியாக எஞ்சி இருக்கின்ற உடமைகளை விற்றுக்கொண்டிருக்கும் அனைத்து மனிதர்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன்.  ஆனால் என்மட்டில் இது வேறுமாதிரியானது….என் நிலையை நான் பொருட்படுத்தவில்லை.  ஏராளமான புதிய பொருட்களை வாங்கிக்கொள்ள எனக்கு காலமுண்டாகும்.  நான் விற்கவியலாத, இழக்கவும் முடியாத, யாரும் பொதுவுடமையாக்கிவிட முடியாதது என்னிடம் உள்ளது.   எனக்கு எதிர்காலமிருக்கிறது, வாழும் எதிர்காலம்….என் குழந்தைகள்.”    

சைபீரிய சிறைக்கு செல்லுமுன் தன் காதலனை திருமணம் செய்துக்கொள்ள மகள் ஆசைப்படுவதால் அதை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் வாங்கி நடத்தி வைக்கிறார். அவர்கள் இருவரும் சைபீரியாவில் வெகு தொலைவில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றறிந்து ஒரே இடத்திலிருக்கும் சிறைக்கு அனுப்ப எல்லா முயற்சியும் எடுத்தும் அவளின் தந்தையால் எதுவும் செய்யமுடியாமல் போக,  இறுதியாக தன் மகனிடம் இதற்கு உதவி கேட்டு அவன் மறுக்குமிடம் சில்லிடவைக்கிறது.  

இக்கதையில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஆண்டிரி.  நிதானமான பேச்சும், நேர்மையான குணமும், காதலுக்காக ஏங்குமிடங்களும், அவன் வளர்ந்த விதங்களும், போர்முனையில் அவனுக்கு கிடைத்த அனுபவங்களும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. கிராவுடனான அவனின் உரையாடல்கள் அணைத்துமே சிறப்பானது. அவற்றிலிருந்து சில வரிகள்…

“அவனுடைய வார்த்தைகள் அவளுடைய வார்த்தைகளோடு போராடிக்கொண்டிருந்தது, ஆனால் அவன் கண்களோ அவளுடைய கண்களை உதவிக்கு நாடியது.  அவள்…அவன் பேசிய வார்த்தைகளுக்கு ‘இல்லை’ என்றாள் ஆனால் அதை பேசிய குரலுக்கோ ‘ஆமாம்’ என்றாள்.”

“கடவுள்  – எப்பெயரை வைத்து கடவுளை அழைக்க நினைத்தாலும் அது அதிகபட்ச சாத்தியத்தின் அவனின் உயரிய புரிதலாகும்.    எவனொருவன் தன் உயரிய புரிதல்களை தன்னின் சாத்தியத்திற்கு மேலும் மேன்மையானதாக வைக்கிறானோ அவன் அவனை பற்றியும் அவன் வாழ்க்கையை பற்றியும் குறைவாக நினைத்துக்கொள்கிறான்.   உன் வாழ்கையை பற்றி நீயே உயர்வாக எண்ணுவதும், மிக நல்லதையே, சிறப்பானதையே, சாத்தியப்படுமனைத்தையுமே இங்கு இப்போதே உனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுவதும் எத்தனை அரிய பொக்கிஷமென்று தெரியுமா உனக்கு.   சொர்கத்தை கற்பனை செய்துக்கொண்டு அதை பற்றி கனவுகாண்பதில்லை ஆனால் அதை உரிமையோடு கோரவேண்டும்.  நீயும் நானும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.   ஆனால் உனக்கு வாழ்கைக்காக போராடவேண்டும், கொல்லவேண்டும்….வாழ்க்கைக்காக இறக்கவும் வேண்டும், ஆனால் எனக்கோ வாழ்க்கையை வாழ மட்டுமே வேண்டும்.”


“எனக்கு என்ன வேண்டுமென்பதை எப்போதுமே நான் அறிந்துவைத்திருக்கிறேன்.  உன் தேவைகளை நீ அறிந்திருந்தால் அதை நோக்கியே நீ நகர்வாய்.  சில சமையங்களில் மிக வேகமாகவும் சில சமையங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு அடி மட்டுமே எடுத்துவைத்திருப்பாய்.  வேகமாக நகரும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்….எனக்குத் தெரியவில்லை.  இதன் வித்தியாசத்தை நான் எப்போதோ மறந்துவிட்டேன். நகர்ந்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இது ஒரு பொருட்டல்ல.” 


கிராவின் காதலன் லீயோவின் மருத்துவச்செலவுக்கு பணமில்லை என்பதால் பலரிடமும் உதவி கேட்கிறாள். எல்லா இடத்திலும் உதவி மறுக்கப்படுகிறது. அவள் கடைசியாக ஒர் உயர் அதிகாரியிடம் மன்றாடும் விதம் வாசிக்கும் நமக்கே உதவி செய்ய ஒப்புக்கொள்வாறென எண்ணத்தோன்றுகிறது.  ஆனால் சற்றும் எதிர்ப்பார்க்கா விதத்தில் வெகு சாதாரணமாக நிராகரிக்கப்படுவாள். 


எல்லா நேர்மையான வழியும் அடைபடும்போது நேசிப்பவனின் உயிரைக்காப்பற்ற, அவனை எப்படியாவது குணப்படுத்திவிடவேண்டும் என்ற ஆவலில் தன் நண்பன் ஆண்டிரியின் காதலை ஏற்கிறாள். அவனை காதலிப்பதாக நடிக்கிறாள். அவனிடமிருந்து தன் ஏழ்மையான குடும்பத்தின் செலவுக்கென பண உதவி பெறுகிறாள்.  அதை தன் காதலனனின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துகிறாள்.  தன்னை அவள் காதலிக்கறாள் என்று அறிந்து ஆண்டிரி மகிழ்கிறான்.  அவளுக்காக எல்லாம் செய்கிறான். அதில் சந்தோஷம் அடைகிறான் இவ்வாறு…


“இவ்விஷயங்கள் அனைத்தும் இவ்வுலகில் உள்ள எவருக்கும் எந்த அர்த்தத்தையும் தருவதில்லை.  ஆனால் எனக்கு தருவதுண்டு. ஒவ்வொரு மணி நேரத்தையும் நோக்கத்தோடு செலவிட வேண்டுமென வாழ்ந்துக்கொண்டிருந்த நான், எனக்காக மட்டும் என்பதல்லாது வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் இருத்தலுக்கான உணர்வை தீடீரென்று கண்டுபிடிக்கிறேன்.  இப்படி இருப்பதை பற்றி நான் தர்க்கம் கூட செய்யமுடியாத, சந்தேகிக்க முடியாத, சண்டையிட முடியாத அளவுக்கு எவ்வளவு புனிதமானது இது என்பதை காண்கிறேன். என் சுயசந்தோஷத்தை மட்டுமே நியாயப்படுத்தும் வாழ்க்கை சாத்தியமாகிறதென்பதை அறிகிறேன். பிறகு சட்டென மற்ற அனைத்துமே வித்தியாசமாக தெரிகிறது எனக்கு.”  


காதலை நிராகரிப்பதைவிட அதை ஏற்றுக்கொண்டதாக நடிப்பது எத்தனை கொடூரமானது.  காதலை தவிர நண்பனின் உதவிபெற வேறு எந்த வழியை தேர்ந்தெடுத்திருந்தாலும் அத்தனை நெருடலாக இருந்திருக்காது.  ஆண்டிரி இதை அறியவரும்போது அவனிடன் சென்று பேசுகிறாள்.  மிக அற்புதமான நான்கைந்து பக்கங்கள் கொண்ட உரையாடல் அவை.  ஏன் அப்படி நடந்துக்கொண்டாள் என்பதற்கான விளக்கமாக அமையும் அவள் பேச்சை நிதானமாக கேட்டு தன்னை அவள் காதலிக்கவில்லை என்பது தெரிந்தும் அவளிடம் மிகவும் கரிசனமாக உன் நிலையில் நான் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன் என் காதலுக்காக…..உனக்காக என்று முடியும் அவர்களின் அப்பேச்சு ஆண்டிரியின் கதாப்பாத்திரத்தை மிகச் சிறந்த மனிதனாக காட்டியிருக்கிறது. 


ஆண்டிரியாலையே சில குற்றங்களுக்காக லியோ கைது செய்யப்பட்டு, கீராவின் காதலன் என்றறிந்த பின்னர் அவன் முயற்சிகளாலையே மீண்டும் விடுவிக்கப்பட்டவுடன், அவர்களின் வீட்டிற்கு சென்று ஆண்டிரி பேசுமிடம் கிராவின் மேலான அவனின் அதீத நேசத்தை காட்டுகிறது.  அவ்விடத்திலிருந்து அவன் கிளம்பி வெளியே சென்றவுடன் அவனிடம் பேச கிரா ஓடுகிறாள். அப்போது அவன்….


“இப்படி இருப்பது நல்லதென உனக்குத்தோன்றவில்லையா.  எதையுமே சொல்லிக்கொல்லாமல் நாம் இருவருமே புரிந்துக்கொண்டோம் என்றுணர்ந்து…..நம் மௌனங்களுக்கே விட்டுவிடுவோம்.  அந்த அளவுக்கு நாம் இப்பொழுதும் மனமொத்து இருக்கிறோமல்லவா?” என்று கூறிவிட்டு செல்லுமிடம் சிலிர்ப்பூட்டுகிறது. 


சாதிக்க துடிக்கும் இளம்பெண்…காதலுக்காக காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து அவனுடன் தங்கி அவன் உடல்நலத்திற்காக நண்பனை ஏமாற்றி காதலனை உயிர்பிழைக்கச் செய்து…நண்பனை இழந்து…அவன் தற்கொலைக்கு தான் காரணமோ என்று வருந்தி…கடைசியில் காதலனையும் பிரியுமிடம் மிகவும் நெகிழ்ச்சியானது. பிரிந்தும் நிலைக்கும் அவளின் காதலும், இத்தனை நிகழ்ந்த பிறகும் தன் லட்சியப்பாதையில் முன்னேறத்துடிக்கும் அவளின் தைரியமும் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.  இதை அயன்ராண்ட் கிட்டதட்ட தன் சுயசரிதை என்றே கூறுகிறார் முன்னுரையில்.  இறுதியாக கதை இவ்வரிகளில் நிறைவடையும் போது கனக்கிறது மனது. 


“அவள் புன்னகைத்தாள். இறந்துக்கொண்டிருக்கிறாளென அவளுக்குத்தெரியும்.  இனிமேல் அது ஒரு பொருட்டல்ல.  எந்த ஒரு மனித வார்த்தையும் எப்பொழுதும் சொல்லிவிடமுடியாத எதையோ ஒன்றை அவள் அறிந்துக்கொண்டாள். இப்பொழுது அது அவளுக்குத்தெரியும்.  இதற்காக காத்திருந்தவள் இப்போததை உணர்கிறாள்…இருந்ததைப்போல…வாழ்ந்ததைப்போல.  வாழ்க்கையை சப்தமில்லாத துதிப்பாடலைப்போல, ஆழமான சிறிய துவாரத்திலிருந்து பனியில் சொட்டிக்கொண்டிருக்கும் சிகப்பு துளிகளைப்போல, அச்சிகப்பு துளிகள் கசிந்துக்கொண்டிருக்கும் அடிஆழத்தைப்போல உணர்கிறாள்.  ஒரு கனம் அல்லது முடிவின்மை – எதுவாக இருப்பின் என்ன?  வாழ்க்கை, தோற்கடிக்கமுடியாதது, இருந்தது, இன்னும் இருக்கலாம்.  அவள் புன்னகைத்தாள்…இத்தனை சாத்தியமாயிற்றே என்ற அவளின்  கடைசி புன்னகை.”

     ———————————- 

மொழிபெயர்ப்பு கச்சிதமாக வரவில்லையென்பதால் ஆங்கிலவரிகளையும் இடுகிறேன்.


You know, this is not a cheerful place.  I feel so sorry for all these people here, selling the last of their possessions, with nothing to expect of life.  For me, its different.  I don’t mind.  What a few knick knacks more or less?  I’ll have time to buy plenty of new ones.  But I have something I can’t sell and can’t lose and it can’t be nationalized.  I have a future.  A living future.  My children. 


His words struggled with hers, but his eyes searched hers for support.  She said ‘no’ to the words he spoke, and ‘yes’ to the voice that spoke them.


Because, you see, God-whatever anyone chooses to call God – is one’s highest conception of the highest possible. And whoever places his highest conception above his own possibility thinks very little of himself and his life.  It’s a rate gift, you know, to feel reverence for your own life and to want the best, the greatest, the highest possible, here, now, for your very own.  To imagine a heaven and then not to dream of it, but to demand it.  You see, you and I, we believe in life.  But you want to fight for it, to kill for it, even to die-for life.  I only want to live it.


Well, I always know what I want.  And when you know what you want- you go towards it.  Sometimes you go very fast, and sometimes only an inch a year.  Perhaps you feel happier when you go fast, I don’t know.  I’ve forgotten the difference long ago, because it really doesn’t matter, so long as you move.


And all those things, they have no meaning for anyone on earth, but me, and when I’ve lived a life where every hour had to have a purpose, and suddenly I discover what its like to feel things that have no purpose but myself, and I see suddenly how sacred a purpose that can be so, that I cant even argue, I cant doubt, I cant fight it, and I know, then, that a life is possible whose only justification is my own joy-then everything, everything else suddenly seems very different to me. 


I’ve given up and I am not afraid.  Only there’s something I would like to understand.  And I don’t think anyone can explain it.  You see, I know it’s the end for me.   I know it, but I can’t quite believe it, I can’t feel it.  Its so strange.  There is your life.  You begin it, feeling that its something so precious and rare, so beautiful that its like a sacred treasure.  Now its over, and it doesn’t make any difference to anyone, and it isn’t that they are indifferent, its just that they don’t know, they don’t know what it means, that treasure of mine, and there’s something about it that they should understand.  I don’t understand it myself, but there’s something that should be understood by all of us.  Only what it is?  What? 


Kira, don’t you think its better –like this? He whispered.  ‘If we don’t say anything –and just leave it to….to our silence, knowing that we both understand, and that we still have that much in common? 


She smiled.  She knew she was dying.  But it did not matter any longer.  She had known something which no human words could ever tell and she knew it now.  She had been awaiting it and she felt it, as if it had been, as if she had lived it.  Life had been, if only because she had known it could be, and she felt it now as a hymn without sound, deep under the little hole that dripped red drops into the snow, deeper than that from which the red drops came.  A moment or an eternity- did it matter?  Life, undefeated, existed and could exist.  She smiled, her last smile, to so much that had been possible. 

Read Full Post »

Title : The FountainHead
Author : Ayn Rand
Pages : 694
Year : 1943

Fountainhead

இக்கதையின் பிரண்மாண்டமான வடிவத்திலிருந்து ஒரு துளி அளவு கூட அதைபற்றி எழுதப்போகும் என் எழுத்தில் கொண்டுவர முடியாது. என்னால் தொடமுடியாத, தொட முயற்சிக்கக்கூட முடியாத உயரம் அது. எந்த மாதிரியான கதை? எதைபற்றியது என்பதையெல்லாம் சில வரிகளில் எழுதி கதையை சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஆங்கிலப்புதினங்கள் வாசிக்கும் அனைவருக்கும் இப்புத்தகம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இப்புத்தகத்தை வாசிக்கும் போதும், வாசித்து முடித்தவுடனும் இதுவரை எப்போதும் அனுபவித்திறாத முற்றிலும் புதிய உணர்வாக இருந்தது. நிறைவையும் வெறுமையும் வலியையும் குதூகலத்தையும் ஒன்றாக ஒரே கணத்தில் உணருவதைப்போல என்று தோராயமாக சொல்லலாம்.

இக்கதையில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் தனக்கு சரியென்று தோன்றுவதை தயங்காமல் செய்கிறார்கள். தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். யாருக்காகவும் எதையும் எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்கள். செய்வதை முழுமனதுடன் செய்கிறார்கள், மாற்றுக்கருத்திற்கு வழிகொடுப்பதில்லை. பிறரின் விமர்சனங்களை கேட்பதில்லை. இன்னும் பல அசாத்திய குணங்கள் கொண்டவர்கள் இருவரும். கதைகளுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படியாக வாழ நம்மில் எத்தனை பேர் ஆசைப்படுகிறோம்? ஆனால் ஆசைகள் வெறும் ஆசைகளாகவே நின்றுவிட்டதன் காரணம் என்ன? தைரியமின்மையா? மனத்திடமின்மையா? நம் சமுதாய அமைப்பா? இதுதான், இப்படிதான் இதில் எவ்விதமாற்றமும் கிடையாது. நான் அறிந்திருப்பதே, செய்வதே சரி. இதை மாற்றிக்கொள்ளவோ, கைவிடவோ அவசியமில்லை என்று நம்மால் துணிச்சலாக இருக்க முடியுமா? அப்படி சொல்லும் அளவிற்கு நம்மீது நமக்கு நம்பிக்கையுண்டா? கச்சிதமாக அறிந்து வைத்திருக்கிறோமா?

ஆசைபடு இப்படியாக இருக்க, இருக்க முடியவில்லையா, கிடைக்கவில்லையா, கிடைத்ததில் சமாதானம் செய்துக்கொள், அதனுடன் வாழப்பழகிக்கொள் என்றுதானே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். உன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள் என்றுதானே நமக்கு போதிக்கப்படுகிறது. ஆனால் இப்புத்தகம் அவற்றிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. உன் சந்தோஷமே, உன் திருப்தியே உனக்கு பிராதானம் என்று சொல்கிறது.

அயன் ராண்டின் மிக பிரபலமான இந்தக்கூற்று போல தான் அவர் கதையின் கதாநாயகனும்…

‘My philosophy, in essence, is the concept of man as a heroic being, with his own happiness as the moral purpose of his life, with productive achievement as his noblest activity, and reason as his only absolute’

நாம் முயன்று தோற்ற விஷயங்களை, நாம் பயந்து ஒதுக்கிவிட்ட விஷயங்களை, நாம் நினைத்துக்கூடா பார்க்காத விஷயங்களை, துணிந்தால் செய்யமுடியும் என்று காட்டியிருக்கிறது இக்கதை. வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள்.

அயன் ராண்டின் மற்ற நாவல்கள் :
1. We the Living – 1936
2. Anthem – 1938
3. Atlas Shrugged – 1957

இப்புத்தகத்தில் நான் ரசித்த வரிகள் ஏராளமாக இருக்கின்றது.  அதிலிருந்து வெகு சிலவற்றை இங்கே இடுகிறேன்…

  • Every Form has its own meaning.  Every man creates his meaning and form and goal.   Why is it so important – what others have done?

  • I set my own standards.  I inherit nothing.   I stand at the end of no tradition.  I may perhaps, stand at the beginning of one.

  • You’ve made a mistake already.  By asking me.  By asking anyone.  Never ask people.  Not about your work.  Don’t you know what you want?   How can you stand it, not to know?

  • Everything has strings leading to everything else.  We’re all so tied together.   We’re all in a net, the net is waiting, and we’re pushed into it by one single desire.  You want a thing and its precious to you.   Do you know who is standing ready to tear it out of your hands?  You cant know, it may be so involved and so far away, but someone is ready and you’re afraid of them all.   And you cringe and you crawl and you beg and you accept them – just so they’ll let you keep it.  And look at whom you come to accept.

  • I take the only desire one can really permit oneself.  ‘Freedom’.  To ask nothing,  To expect nothing, To depend on nothing. 

  • I cant learn how to handle people.  I cant.   I don’t know how.  I was born without some one particular sense.  I have no organ to acquire it with.  I don’t know whether its something I lack, or something extra I have that stops me.  Besides, I don’t like people who have to be handled. 

  • A desire to choose the hardest might be a confession of weakness in itself.  

  • Only the nice explanations are never the true ones.  

  • The causes of illusions are not pretty to discover.  They’re either vicious or tragic.

  • Integrity is the ability to stand by an idea.  That presupposes the ability to think.  Thinking is something one doesn’t borrow or pawn.

  • A quest for self respect is proof of its lack.

  • No happy person can be quite so impervious to pain.

  • That love is reverence and worship and glory and the upward glance.  Not a bandage for dirty shoes.   But they don’t know it.  Those who speak of love most promiscuously are the ones who’ve never felt it.  They make some sort of feeble stew out of sympathy, compassion, contempt and general indifference and they call it love.  Once you’ve felt what it means to love as you and I know it – the total passion for the total height – you’re incapable of anything less. 

  • A matter of perspectives and relativity.  The distance permissible between the extremes of any particular capacity is limited.  The sound perception of an ant does not include thunder.

  • We live in our minds, and existence is the attempt to bring that life into physical reality to state it in gesture and form.

  • What you feel in the presence of a thing you admire is just one word – ‘Yes’.  The affirmation, the acceptance, the sign of admittance.  And that ‘Yes’ is more than an answer to one thing, it’s a kind of ‘Amen’ to life, to the earth that holds this thing, to the thought that created it, to yourself for being able to see it.  But the ability to say ‘yes’ or ‘no’ is the essence of all ownership.  Its your ownership of your own ego.  Your soul, if you wish.  Your soul has a single basic function – that act of valuing.  ‘Yes’ or ‘No’, ‘I wish’ or ‘I do not wish’.   You cant say ‘Yes’ without saying ‘I’.  There’s not affirmation without the one who affirms.  In the sense, everything which you grant your love is yours.

  • Its easier to donate a few thousand to charity and think oneself noble than to base self respect on personal standards to personal achievement.  Its simple to seek substitutes for competence – such easy substitutes : love, charm, kindness, charity.  But there is not substitute for competence.

  • If any man stopped and asked himself whether he’s ever held a tryly personal desire, he’d find the answer.  He’d see that all his wishes, his efforts, his dreams, his ambitions are motivated by other men.  

  • Is sacrifice a virtue?  Can a man sacrifice his integrity?  His honor? His freedom?  His ideal?  His convictions?  The honesty of his feelings? The independence of his thought?  But these are a man’s supreme possessions.  Anything he gives up for them is not a sacrifice but an easy bargain.  They, however, are above sacrificing to any cause or consideration whatsoever.  Should we not, then, stop preaching dangerous and vicious nonsense?   Self Sacrifice?  But it is precisely the self that cannot and must not be sacrificed.  It is the unsacrificed self that we must respect in man above all.  

  • An agreement reached by a group of men is only a compromise or an average drawn upon many individual thoughts.  

  • No man can give another the capacity to think.  Yet that capacity is our only means of survival.

  • In all proper relationships there is no sacrifice of anyone to anyone.

Read Full Post »