Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Helen Prejean’ Category

Title : Dead Man Walking
Author : Helen Prejean
Pages : 313

மிகச்சிறந்த ஆங்கில நாவல் இது.  கதையின் மையக்கருத்து மரண தண்டனையை எதிர்த்து குரல் கொடுக்கிறது.  எத்தனை குரூர குற்றவாளியாக இருந்தாலும் அவனுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் அவன் உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறது. ஒரு கன்னியாஸ்திரி இக்கருத்தை அனைவருக்கும் உணர்த்த எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்பதுதான் கதை. 

மரணதண்டனை கைதிகளை ‘Dead Man’ என்றழைக்கிறார்கள். அப்படி ஓர் கைதியை ஆன்மீக போதகர் (Spiritual Adviser) என்றமுறையில் அக்கன்னியாஸ்திரி முதல்முறையாக கடிதம் மூலமாக தொடர்புகொள்கிறார். பிறகு நேரில் சென்றும் பார்க்கிறார். அக்கைதியை பற்றி அனைத்தும் அறிகிறார். மரணத்திலிருந்து அவனை விடுவிக்க கடைசி நிமிடம் வரை பாடுபட்டும் ஒன்றும் செய்யமுடியாமல் போகிறது. அதன்பிறகு மிகத்தீவிரமாக மரணதண்டனையை சட்டத்திலிருந்து அழிக்க போராடுவதில் தொடர்கிறது கதை.

வழக்கமாக கதைகளில் வருவதுபோல் இதிலும் கடைசி நிமிடத்தில் எப்படியாவது கைதியை காப்பாற்றிவிடுவார் என்று ஆர்வத்தோடு வாசிக்கும் நம்மை, கதையில் வரும் முதல் கைதியின் மரணம் உலுக்குகிறது. அவன் மரணத்திற்கு முன், நிமிடக்கணக்கில் நகரும் கதையில் அப்படியே ஒன்றிப்போய்விடச்செய்கிறது.  மிகவும் ரசித்து வாசித்தப்பகுதி அது. குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை கன்னியாஸ்திரி சென்று பார்ப்பதும் அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல்களும் கூட மிகவும் ஆழ்ந்து வாசிக்கும்படியாக இருக்கிறது. 

இக்கதையை வாசித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.  நினைவில் நின்றதை மட்டும் இப்புத்தகத்திற்கான சிறிய அறிமுகமாக இங்கு இட்டிருக்கிறேன்.  இப்புத்தகம் 1994 American Library Association Notable Book of the Year பரிசை வென்றிருக்கிறது.  1995ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.

நதியலை

Read Full Post »