Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Jeffrey Archer’ Category

Title : Sons of Fortune (Novel)
Author : Jeffrey Archer
Pages : 516

இரட்டை ஆண்குழந்தைகள் (Nat Cartwright & Fletcher Davenport) பிறந்தவுடனேயே பிரிந்து வெவ்வேறு இடத்தில் வளர்ந்து கதையின் முடிவில் இணைகிறார்கள்.  பிறந்ததுமுதல் குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவமென்று இருவருடைய கதையும் ஆமைவேகத்தில் நகர்ந்து முதல் 300 பக்ககங்கள் முடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது. 

இருவரும் வெவ்வேறு துறையில் தேர்ச்சி பெற்று வேலை பார்க்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் சுவாரிஸ்யமாக நகர்கிறது. உடன்பிறப்புகள் என்று தெரியாமலே விபத்தில் சிக்கிய சகோதரருக்கு ரத்தம் கொடுப்பது, குற்றவாளியாக்கபட்டவருக்காக நீதிமன்றத்தில் மற்றொருவர் வாதாடுவது, அரசியல், வணிகம் என்று தமிழ் சினிமா போல் போகிறது கதை.

மருத்துவர் மூலமாக தாங்கள் உடன்பிறப்புகள் என்றறியப்பெற்று அதை சில காரணங்களுக்காக ரகசியமாகவே வைத்துக்குகொள்ள முடிவு செய்கிறார்கள். இதற்கு பிறகு தொடரும் அவர்கள் உரையாடல்கள் எல்லாமே அருமை.  நீதிமன்ற வழக்குகளில் வாதாடப்படுவதெல்லாமும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  கடைசி 200 பக்கங்கள் முதல் 300 பக்கங்கள் ஏற்படுத்திய சலிப்பை நீக்கிவிடுகிறது.  மொத்தத்தில் பொறுமையாக படிக்கவேண்டிய ஒரு பொழுதுபோக்கு நாவல்.

Jeffrey Archerன் சிறந்த படைப்புகளாக கருதப்படுவது :
Kane & Abel
The Prodigal Daughter

நதியலை

Read Full Post »