Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Kaleel Gibran’ Category

இது கலீல் கிப்ரானின் ‘Have mercy on me, my soul’ கவிதையின் மொழிபெயர்ப்பு.  இதில் soul என்று கவிஞர் எதனை குறிப்பிடுகிறார்? என்மீது கருணைகொள் என்னுயிரே என்று தன் காதலியிடம் சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன்.  பிறகு இது தனக்குள் நிகழும் போராட்டத்தை பற்றிய கவிதையெனத்தோன்றியது. soul – ‘ஆன்மா/ஆத்மா’ என்றெழுதினால் கவிதைக்கு பொருந்திவராத மாதிரி தோன்றியதால் ‘மனம்’ என்றிட்டிருக்கிறேன். முடிந்த அளவு முயற்சி செய்து மொழிமாற்றியிருக்கிறேன்.  கலீல் கிப்ரான் ரசிகர்கள் சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. 

என்மீது கருணைகொள் என்மனமே
———————————————————–

ஏன் அழுகிறாய் என்மனமே?
என் பலவீணங்களை அறிந்ததினாலா?

என் தவறுகளல்ல என்றுணர்ந்ததினால் 
இக்கண்ணீர் கூர்மையாகத் தாக்கி,
எனை காயப்படுத்துகிறதே.
இன்னும் எத்தனை நேரம் அழுவாய்?

உன் கனவுகளின்,
உன் தேவைகளின்,
உன் கட்டளைகளின்
அர்த்தங்களை விவரிக்கும்
மனித வார்த்தைகளைத் தவிர
வேறொன்றுமில்லை என்னிடம்.

எனைப்பார் என்மனமே,
உன்போதனைகளைக்கேட்டே
என் வாழ்க்கை செலவழிந்துவிட்டது.

நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்
என்று நினைத்துப்பார்!
உனக்கிசைந்து தொடர்வதிலேயே
நான் சோர்ந்துவிட்டேன்.

என் இதயம்
மதிப்புடைய சிம்மாசனமாயிருந்தது, 
ஆனால் இப்பொழுதோ
அடைக்கப்பட்ட அடிமையானது;

என் பொறுமை
ஒர் நல்லத் துணையாயிருந்தது,
ஆனால் இப்பொழுதோ
எனக்கெதிராய் சண்டையிடுகிறது;

என் இளமை
எனக்கு நம்பிக்கையாயிருந்தது,
ஆனால் இப்பொழுதோ
நிராகரித்ததற்காக பழிக்கிறது.

என் சுயவிருப்பங்களைத் தவிர்த்து
நீ கட்டளையிட்ட பாதையில் நடந்தே
என் வாழ்க்கையின் சந்தோசங்களை
பாலைவனமாக்கினேன்.

எனக்கு நேர்மையாய் இரு,
இல்லையேல் மரணம் வந்து
எனை விடுவிக்கச் சொல்,
நேர்மையே உன் மதிப்பு.
 
என்மீது கருணைகொள் என்மனமே.
நான் சுமக்க முடியாதளவு
அன்பை என்மேல் பொழிந்தாய்.
நீயும் அன்பும்
பிரிக்கவியலா இணைப்புகள்;
நானும் என்னுடல் பொருளும்
வலுவற்ற பிணைப்புகள்.
வலுவுடையதோடு வலுவற்றதின்
போராட்டம் என்றாவது தீருமா?

என்மீது கருணைகொள் என்மனமே.
எட்டிப்பிடிக்கமுடியாத அதிர்ஷ்டங்களை
எனக்குக் காட்டினாய்
நீயும் அதிஷ்டமும்
மலையுச்சியில் இருக்கின்றீர்கள்;
நானும் துயரமும் ஒன்றாக
பல்லத்தாக்கின் படுகுழியில்
நிராகரிக்கப்பட்டிருக்கின்றோம்.
மலையும் மடுவும்
என்றாவது இணையுமா?

என்மீது கருணைகொள் என்மனமே.
எனக்கு அழகை காட்டியிருக்கிறாய்
பின் என்னிடமிருந்து மறைத்துவிட்டாய்.
நீயும் அழகும்
வெளிச்சத்தில் வாழ்கிறீர்கள்;
நானும் அறியாமையும்
பிணைக்கப்பட்டு இருளில்லுள்ளோம்.
வெளிச்சம் இருட்டை
என்றாவது அட்கொள்ளுமா? 

நீயோ முடிவினால்
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறாய்,
இப்போது சந்தோஷத்தோடு
எதிர்ப்பார்த்திருக்கின்றாய்;
ஆனால் வாழ்க்கையுடன் அவ்வுடல்
உயிரோடு தவித்துக்கொண்டிருக்கிறது.
இது பெருங்குழப்பம் என்மனமே.

நீயோ நிலைபேறுடைமையை
நோக்கிவிரைகிறாய்,
ஆனால் இவ்வுடலோ
மெதுவாக அழிவை நோக்கி.
இவனுக்காக காத்திருக்கவில்லை நீ,
வேகமாக செல்ல இயலவில்லை இவனால்.
இது பெருஞ்சோகம் என்மனமே

நீயோ சொர்கத்தின் ஈர்ப்பில்
உயரப்பறக்கிறாய்,
ஆனால் இவ்வுடலோ
பூமியின் ஈர்ப்பில் விழுகிறது.
இவனை தேற்றவில்லை நீ,
உன்னை பாராட்டவில்லை இவன்.
இது பெருந்துயரம் என்மனமே

நீயோ அறிவில்
செழித்திருக்கிறாய்,
ஆனால் இவ்வுடலினாலோ
எளிதில் புரிந்துக்கொள்ளவும் இயலாது
நீ சமாதானமாகவில்லை,
இவன் கீழ்படியவில்லை.
இது பெருஞ்சங்கடம் என்மனமே

நீயோ
அமைதியான இரவில்
பிடித்தமானதை காணுகிறாய்.
அதன் இருப்பில்
ஆனந்தமடைகிறாய்.
எதிர்ப்பார்ப்பிற்கும் பிரிவிற்குமிடையில்
சிக்கிய கசப்பான பலியாலியான
என்னுடலோ இங்கே தவிக்கிறது,
இது நரக வேதனை என்மனமே

என்மீது கருணைகொள் என்மனமே.

– நதியலை
***********************************************************

Have mercy on me, my Soul! – Kaleel Gibran
Why are you weeping, my Soul?
Knowest thou my weakness?
Thy tears strike sharp and injure,
For I know not my wrong.
Until when shalt thou cry?
I have naught but human words to interpret your dreams,
Your desires, and your instructions.
Look upon me, my Soul;
I have consumed my full life heeding your teachings.

Think of how I suffer!
I have exhausted my life following you.
My heart was glorying upon the throne,
But is now yoked in slavery;
My patience was a companion,
But now contends against me;
My youth was my hope,
But now reprimands my neglect.
Why, my Soul, are you all-demanding?
I have denied myself pleasure
And deserted the joy of life
Following the course which you impelled me to pursue.
Be just to me,
Or call Death to unshackle me,
For justice is your glory.
Have mercy on me, my Soul.
You have laden me with Love until I cannot carry my burden.
You and Love are inseparable might;
Substance and I are inseparable weakness.
Will e’er the struggle cease between the strong and the weak?
Have mercy on me, my Soul.
You have shown me Fortune beyond my grasp.
You and Fortune abide on the mountain top;
Misery and I are abandoned together in the pit of the valley.
Will e’er the mountain and the valley unite?
Have mercy on me, my Soul.
You have shown me Beauty,
But then concealed her.
You and Beauty live in the light;
Ignorance and I are bound together in the dark.
Will e’er the light invade darkness?
Your delight comes with the Ending,
And you revel now in anticipation;
But this body suffers with the life
While in life.
This, my Soul, is perplexing.

You are hastening toward Eternity,
But this body goes slowly toward perishment.
You do not wait for him,
And he cannot go quickly.
This, my Soul, is sadness.
You ascend high, though heaven’s attraction,
But this body falls by earth’s gravity.
You do not console him,
And he does not appreciate you.
This, my Soul, is misery.
You are rich in wisdom,
But this body is poor in understanding.
You do not compromise,
And he does not obey.
This, my Soul, is extreme suffering.
In the silence of the night you visit The Beloved
And enjoy the sweetness of His presence.
This body ever remains,
The bitter victim of hope and separation.
This, my Soul, is agonizing torture.
Have mercy on me, my Soul!

Read Full Post »